இந்தியன்-2 வின் மிரளவைக்கும் அப்டேட்.! விவேக்கிற்கு பதில் மின்னல் நடிகர்.!?

இந்தியன்2 திரைப்படத்தில் விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

உலகநாயகன் கமல்ஹசன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராக உள்ளதாக 2 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பில் விபத்து, கொரோனா படக்குழுவினர் இடையே பிரச்சனை என ஷூட்டிங் நடைபெறாமலே இருந்தது.

இதற்கிடையில் கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது தயாரிப்பு நிறுவனம் – இயக்குனர் – நடிகர் என அனைவரிடத்திலும் பிரச்சனை பேசி முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். விரைவில் அப்பட ஷூட்டிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இன்னோர் சிக்கல் இருந்தது. இப்படத்தில் நடித்திருந்த நடிகர் விவேக் இந்த வருட ஏப்ரலில் உயிரிழந்தார். அதனால், அவர் நடித்த காட்சியை எப்படி என்ன செய்வது வேறு நடிகரை எப்படி நடிக்க வைப்பது என யோசித்து வந்துள்ளனர்.

தற்போது அந்த வேடத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க இருக்கிறாராம். அவர் நடிப்பில் அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தில் சிபு எனும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழில், பேட்ட, ஜோக்கர், ஜிகர்தண்டா, ஜெய் பீம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து நல்ல நடிகராக வலம் வருகிறார்.

புத்தம் புது இந்தியன்-2 அப்டேட்.! இனி இவர்களுக்கு பதில் இவர்… காஜல், விவேக், த்ரிஷா….

மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதில் வேறு நடிகரை இந்தியன் 2 படக்குழு தேடி வருகிறது. அதே போல, காஜல் அகர்வாலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு பாதி படம் முடிவடைந்து அடுத்து மீது ஷூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார், லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது என அனைத்து கதைகளும் நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

கொரோனாவுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா வந்ததால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இடையில் தயாரிப்பு தரப்பிற்கும், இயக்குனர் தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டு படம் டிராப் என்கிற நிலைமை வந்துவிட்டது.

தற்போது பிரச்சனை தீர்ந்து, டிசம்பர் கடைசி அல்லது ஜனவரியில் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது புது பிரச்சனை உருவாகியுள்ளது. அதாவது, படத்தில் கமிட் செய்யப்பட்ட நடிகர்கள் கால்ஷீட் மற்ற பிரச்சனைகள். அதில் குறிப்பாக மறைந்த நடிகர் விவேக் இந்த படத்தில் போலீசாக நடித்து இருந்தார். தற்போது அவருக்கு பதில் இன்னோர் நடிகரை நடிக்க வைக்க வேண்டும். அதே போல, காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவதால், படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

அதனால், காஜலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்க படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதுதான் தற்போது வரை கிடைத்த தகவல். இன்னும் எந்த நடிகர் மாற்றப்படுகிறார் என வேறு அப்டேட் வருகிறதா என்கிறதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நடிகர் விவேக் மரணம்- 8 வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு…!

நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் விவேக்  இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தடுப்பூசி செலுத்திய அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டு நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என கூறப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு மரணமடைந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

#BREAKING : நடிகர் விவேக் மரணம் – விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்…!

நடிகர் விவேக் மரணம் தொடர்பான விவகாரத்தை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

தமிழ் திரையுலகின் பிரபல நகைசுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம், 17-ம் தேதி மரணமடைந்தார். அதற்கு முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், அவரது மரணம் பல சர்ச்சைகளுக்குள்ளானது. மேலும், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாக தான் காலமானார் என்றும் பலர் கூறியிருந்தனர்.

இதனையடுத்து சுகாதார்த்தத்துறை சார்பில், தடுப்பூசிக்கும், விவேக் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் இதுதொடர்பான புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாகவே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை  வைத்துள்ளார். அவருடைய மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே மிக விரைவில், இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு நோட்டிஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு சுகாதாரத்துறை அளிக்கும் பதிலை அடிப்படையாக கொண்டு இதன் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது.

சட்டப்பேரவையில் கி.ரா., நடிகர் விவேக் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடரில், மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, பிரபல எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய்.!

மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். 

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிற்காக ஜார்ஜியாவிற்கு சென்றிருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை தளபதி 65 படக்குழுவினர் நேற்று முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில், இன்று நடிகர் விஜய் நேரடியாக மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த விவேக் திருவுருவ படத்திற்கு மலர்த்துவி மரியாதை செலுத்திய அவர், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு நன்றி – விவேக் மனைவி உருக்கம்..!!

என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி என்று மறைந்த நடிகர் விவேக் மனைவி அருட்செல்வி விவேக்  கூறியுள்ளார்.  

நகைசுவை நடிகர் விவேக் (59), நேற்று முன்தினம் காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று காலை முதலே பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருமே நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு, சமூக கலை பணியை கௌரவிக்கும் பொருட்டு, காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்திருருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின் காவல்துறையினரின் 2 நிமிட மௌன அஞ்சலிக்கு பின், அவரது பூத உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி விவேக் கூறியது ” அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு நேரத்தில் என் கணவரை இழந்து நிற்கிற எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாகவும் ஒரு மிகப்பெரிய துணையாக இருந்த  மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி அதை என்றைக்குமே நாங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். நீங்கள்  என் கணவருக்கு கொடுத்தது மிகப்பெரிய கவுரவம். அடுத்ததாக காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி கடைசி வரைக்கும் நீங்கள் கூடவே இருந்திர்கள்  ரொம்ப ரொம்ப நன்றி. ஊடகத்துறையில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. உலகமெங்கும் மற்றும் இவ்வளவு தூரம் என் கணவரோடு கடைசி வரைக்கும் வந்த கோடான கோடி ரசிகர்களுக்கும் நன்றி” என்று உருக்கமாக பேசியுள்ளார்

நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்திச் சென்று ரசிகர்கள் அஞ்சலி…!

நடிகர் விவேக்கின் இறுதி  ஊர்வலத்தில், பொதுமக்கள், அவரது ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் விவேக்கின் உடல், காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இறுதி  ஊர்வலத்தில், பொதுமக்கள், அவரது ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், இவரது பூத உடலுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரது இறுதி  கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Breaking: “நடிகர் விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை”- தேர்தல் ஆணையம் அனுமதி!

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நகைசுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரின் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது, குறிப்பிடத்தக்கது.

மனசு நம்ப மறுக்கிறது…! இது ஒரு எதிர்பாராத பேரிடி…! – சீமான்

உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று தான் நினைத்தேன்.  ஆனால், அவரது இழப்பு, ஒரு பேரிடியாக தான் உள்ளது.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விவேக்கின் பூத உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘மனிதன் என்றால், சிலரை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. ஆனால், எல்லாருக்கும் பிடிக்க கூடிய ஒரு மனிதனாக வாழ்ந்தவர் தன சகோதரன் விவேக். இவர் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான நபர்.

அப்துல்கலாம், விவேக்கிற்கு ஒரு கோடி மரக்கன்றுகளை நாடுங்கள் என அறிவுறுத்தினர். எனக்கு தெரிந்து இதுவரை 37 லட்சம் மரங்கன்றுகளை நட்டுள்ளார். இப்படிப்பட்ட சிறந்த மனிதனை  இழந்துள்ளது,மிகவும் கஷ்டமாக  உள்ளது. அவர் நம்முடன் இல்லை என்பதை மனசு நம்ப மாறுகிறது. உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று தான் நினைத்தேன்.  ஆனால், அவரது இழப்பு, ஒரு பேரிடியாக தான் உள்ளது. அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து க் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Exit mobile version