விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகும் காந்தி டாக்ஸ்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ள காந்தி டாக்ஸ் எனும் புதிய படத்திற்கான அப்டேட் ஒன்றை தனது பிறந்த நாளான நேற்று விஜய் சேதுபதி கொடுத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக மாஸ்டர் திரைப்படம் தற்பொழுதுதான் திரையிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ரசிக்கக்கூடிய வில்லனாக விஜய் சேதுபதி இருப்பதாக இந்த படத்திற்கு பாராட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படங்கள் பற்றிய அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு … Read more

குடும்பங்கள் கொண்டாடும் மாஸ் மாஸ்டர் – வீடியோ உள்ளே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி விஜயின் மாஸ்டர் படம் குறித்து பொதுமக்கள் கருத்து என்ன என பார்க்கலாம் வாருங்கள்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய், ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படம் சிலரால் எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும் குடும்பத்தினரால் ரசிக்கப்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது. பொது மக்கள் இது குறித்து என்ன கருத்துக்கள் கூறியுள்ளார்கள் என பார்க்கலாம். இதோ வீடியோ,

இணையத்தை கலக்கும் மாஸ்டர் படக்குழுவினரின் பொங்கல் கொண்டாட்ட வீடியோ உள்ளே!

மாஸ்டர் பட குழுவினர் இணைந்து கடந்த ஆண்டு பொங்கல் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் விஜய் மற்றும் அவருக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக சில எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும், படத்தின் வசூல் மிக சிறப்பாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் … Read more

பிறந்தநாளுக்காக பட்டாக்கத்தியால் கேக் வெட்டி விட்டு வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!

தனது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினருடன் இணைந்து அலுவலகத்தில் பட்டா கத்தி வைத்து பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக தற்பொழுது விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வாள் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. அதேபோல அவர்களை போலீசாரும் துரத்திப் பிடித்து கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தான் தற்போது வழக்கமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் போலீசார் அடிக்கடி அறிவித்து வருகின்றனர். ஆனால் … Read more

மாஸ்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ஜெயம் ரவி!

தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ள தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சாந்தனு மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். … Read more

எனது ரசிகர்களிடம் நடந்துகொள்ளும் முறை பிடிக்கவில்லை எனவே இனி அவருடன் நடிக்க மாட்டேன் – ஸ்ருதிஹாசன்!

தன்னை காணவரும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும். எனவே சுருதிகாசன் விஜய்சேதுபதியுடன் இனி படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ்த் திரையுலகில் வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை போட்டு வரும் நிலையில், தற்பொழுது இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார். … Read more

மக்கள் செல்வனுக்கு ஜோடியாகும் நடிகை கத்ரினா கைஃப்!

விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய ஹிந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரை உலகில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் ஹிந்தியில் மாநகரம் படத்தின் ரீமேக் மும்பை கார் எனும் படத்தில் நடித்து வரக்கூடிய விஜய் சேதுபதி, அந்த தூண் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அவர்களின் இயக்கத்தில் மற்றொரு ஹிந்திப் படத்திலும் நடித்து … Read more

வெளியாகிய துக்ளக் தர்பார் பட டீசருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கடும் கண்டனம்!

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட துக்ளக் தர்பார் படத்தின் டீசருக்கு நாம் தமிழர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகன்னா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் துக்ளக் தர்பார். இந்த படத்திற்கான டீசர் நேற்று முன்தினம் வெளியாகியதை அடுத்து, இந்த டீசருக்கு சில சர்ச்சையான விமர்சனங்களும் … Read more

விஜய் சேதுபதி மற்றும் ரெஜினாவின் முகிழ் – புகழும் இயக்குனர் கார்த்திக்!

இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ள முகிழ் திரைப்படம் 100% ரசிகர்களின் பாராட்டுக்கு தகுதியான படமாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள முகிழ் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்திற்கான ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் அவர்கள், இந்த படம் ரசிகர்களின் பார்வைக்கும் பாராட்டுக்கும் … Read more

யாதும் ஊரே யாவரும் கேளீர் – விஜய் சேதுபதிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குனர்!

விஜய் சேதுபதி தற்போது நடித்துவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரகுநாத் அவர்கள் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடிக்க கூடிய புதிய தமிழ் திரைப்படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளீர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் குறித்த ஒரு சுவாரசியமான … Read more