மழைநீரை சேமிப்போம்..! நமக்காக …! நாட்டுக்காக …!நாளைக்காக -எஸ்.பி. வேலுமணி!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது.இதனால் சமீபத்தில் ஹோட்டல்,தனியார் நிறுவனர்கள் மூடியதாக தகவல் வெளியானது.இதை தொடர்ந்து சென்னைக்கு உடனடியாக தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தண்ணீர் வழங்கி வருகிறது. தண்ணீர் பிரச்சனை இனிமேல் ஏற்படப்படாமல் இருக்க அனைவரும் தங்கள் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் அதிமுக மந்திரி எஸ்.பி. வேலுமணி … Read more

தினமும் குடிநீர் விநியோகிக்கப்படும் : அமைச்சர் வேலுமணி

தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிற நிலையில், இதற்க்கு பல வழிகளில் தீர்வு காணப்பட்டாலும், இன்னும் முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், அமைச்சர் வேலுமணி அவர்கள், வேலூர் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரயிலில் கொண்டு வரப்படும் குடிநீர் கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் -அமைச்சர் வேலுமணி

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.சட்டப்பேரவையில் குடிநீர்  பிரச்சினை தொடர்பாக அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார்.அதில்,  தமிழகம் முழுவதும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் 68 விழுக்காடு மழை குறைவு, இயற்கை பொய்த்தபோதும், அரசு தண்ணீர் வழங்கி வருகிறது. தண்ணீர் பிரச்சினையில், முதலமைச்சர் பழனிசாமி தனி கவனம் செலுத்தி வருகிறார்.ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் வேலுமணி விளக்கம் … Read more