மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸூம், சிபிஎம், சிபிஐ, விசிகவும் ஒன்றா? – திருமாவளவன் கேள்வி

ஆர்எஸ்எஸூம் சிபிஎம், சிபிஐ, விசிகவும் ஒன்றா? மனித சங்கிலிக்கு ஏன் அனுமதி மறுப்பு? என திருமாவளவன் கேள்வி. மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸூம் அரசியல் கட்சிகளான சிபிஐ (எம்), சிபிஐ மற்றும் விசிகவும் ஒரே வகையானவையா?, ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூகநல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? என கேள்வி எழுப்பி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்டோபர் 02  காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு … Read more

விசிக மனித சங்கிலிக்கும் அனுமதி மறுப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை மனித சங்கிலி, பேரணிக்கும் அனுமதி மறுப்பு. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை … Read more

அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது – விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்

படலாசியர் கபிலனின் அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல். பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை நேற்று மாலை 4 மணி அளவில், வீட்டில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்பின் தூரிகையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகம் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மக்கள்கவி கபிலனின் அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது என விசிக … Read more

10% இடஒதுக்கீடு வழக்கு – வரைவு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு. உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என கூறி ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்பி ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி … Read more

#BREAKING: உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது. உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்பி ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பாத், திரிவேதி, பார்டிவாலா ஆகியோரை கொண்ட அமர்வு இன்று வழக்கை … Read more

இதற்கு “கிறிஸ்தவர்” ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் – விசிக தலைவர்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு … Read more

தமிழகத்தில் பதற்றமான சூழலை உருவாக்க பாஜக முயற்சி – திருமாவளவன்

தமிழகத்தில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஜகவை சார்ந்தவர்கள் தமிழகத்தில் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். திமுக அரசு சமூக நீதி அரசாக இயங்கி கொண்டிருக்கிறது. தமிழக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும், … Read more

பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மோதல் ஏற்பட்டதால் பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு. அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி நேற்று நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு அரசியல் தலைவர் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சென்னை, சேலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு அணிவித்தபோது மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் பாஜகவினர் 150 … Read more

அம்பேதக்கர் சிலைக்கு மரியாதை – பாஜக, விசிகவினர் மோதல்!

சென்னை கோயம்பேட்டில் பாஜகவினர் – விசிக தொண்டர்கள் மோதல். அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பாஜக, விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ஒரேநேரத்தில் பாஜக – விசிகவினர் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று சென்னை கோயம்பேட்டில் பாஜகவினரும், விசிகவினரும் ஒருவரையொருவர் கற்களை … Read more

முதல்வருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி – விசிக தலைவர் திருமாவளவன்

அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வருக்கு தொல் திருமாவளவன் நன்றி. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். முதல்ரவரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர். அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், … Read more