பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்குரியது -வைகோ

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என வைகோ வேண்டுகோள். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து வாழ்வில் உயர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் … Read more

ஆளுநர் என்.ஆர்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர்.ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும் வைகோ கடும் கண்டனம். சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் தமிழக ஆளுநர் என்ஆர் ரவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஒருவர் அரசியல் சட்ட நெறிகளை மீறி சனாதன தர்மம் இந்தியாவை வழிநடத்துகிறது என்று பேசியது கண்டனத்துக்குரியது. சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட துடிக்கும் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை தூக்கி பிடிக்கிறார் ஆளுநர் என குற்றசாட்டினார். இந்தியாவை வழிநடத்துவது அம்பேத்கரின் அரசியல் … Read more

திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி – வைகோ

கலைஞரின் பிறந்த நாள் விழா ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.  முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், வைகோ அவர்கள் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாவுடன் … Read more

“பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர்” – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே … Read more

எம்.ஜி.ஆர். போனபோதே கவலைப்படவில்லை.. வைகோவையே தூக்கி எறிந்தோம் – ஆர்எஸ் பாரதி பகிர் பேட்டி

திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கருத்து. திமுகவில் இருந்து யார் போனாலும் கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற அவரிடம், திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை என்றும் வைகோவையே தூக்கி … Read more

‘RSS உறுப்பினர்’ போல பேசக் கூடாது – ஆளுநர் மீது வைகோ காட்டம்!

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் … Read more

மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் – வைகோ அறிவிப்பு!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.துரை வைகோ மதிமுக தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,மதிமுகவில் துரை வைகோவிற்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் 3 மாவட்ட செயலாளர்களும் … Read more

#BREAKING: நான் யாரையும் புண்படுத்தியதில்லை; துரோகம் செய்ய நினைத்தவர்கள் வரவில்லை -வைகோ..!

நான் யாரையும் இதுவரையில் புண்படுத்தி அனுப்பியது கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நான் யாரையும் இழக்க விரும்பவில்லை. நான் யாரையும் இதுவரையில் புண்படுத்தி அனுப்பியது கிடையாது. கட்சி நிர்வாகிகளிடம் பேசியே இதுவரை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில் இதை தெரிவித்துள்ளார். துரோகம் செய்ய நினைத்தவர்கள் வரவில்லை: மதிமுக கூட்டங்களில் சமீபகாலமாக பங்கேற்காத … Read more

வைகோ மகனுக்கு முக்கிய பொறுப்பு – பொதுக்குழு ஒப்புதல்..!

இன்று வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில்,  மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மதிமுக பொதுக்குழு கூட்டம்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இதற்க்கு மதிமுக கட்சியில் பலர் ஆதரவித்த நிலையில் சில எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வைகோ மகனுக்கு பொறுப்பு  இந்த … Read more

மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நாளை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி இடங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை திமுக தலைமை வெளியிட்டிருந்தது. அதன்படி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும், 1 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி … Read more