ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்த இந்தியா!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனில் இருந்து அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. தொடரும் தாக்குதல்  இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த … Read more

“நான் இரு குழந்தைகளுக்கு தந்தை;ரசாயன ஆயுதங்களை கொண்டு எங்களை தாக்க வாய்ப்பு” -ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதியுதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் உயிரியல் ஆயுதங்களின் கூறுகள் தயாரிக்கப்பட்டதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன என்று  ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது.மேலும்,ரஷ்யா வழியாக இடம்பெயரும் பறவைகளை வைரஸ் சுமக்கப் பயன்படுத்துவதாகவும் உக்ரைன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில்,எந்தவொரு இரசாயன அல்லது பிற பேரழிவு ஆயுதங்களும் தங்கள் நாட்டில் உருவாக்கப்படவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதில் அளித்துள்ளார். மேலும்,இது … Read more

கீவ்-வை நெருங்கிய ரஷ்ய படைகள் – 64 கி.மீ. நீளத்திற்கு அணிவகுத்து நிற்கும் ராணுவ வாகனங்கள்!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள்  முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது. இதனையடுத்து,உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது.மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பாக மேலும் சில மணி நேரங்கள் கியூ, … Read more

கல்விக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான்

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய இந்திய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் … Read more

நாடு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!

சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோனை வழங்கும் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்றும் கூறினார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உக்ரைனில் மருத்துவ கல்வி படித்து வரும் மாணவர்களின் எதிர்கால மருத்துவ படிப்பை … Read more

#Breaking:”தலைநகரில் மீண்டும் விமான தாக்குதல்;பதுங்கி கொள்ளுங்கள்” – உக்ரைன் அரசு எச்சரிக்கை!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள்  முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது.இதனையடுத்து,உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் … Read more

“நேட்டோவுடன் இணைய விருப்பம் இல்லை;புடினுடன் பேசத் தயார்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனிடையே,ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள்  கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில்,நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையும் தனது மனநிலை மாறிவிட்டதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக ஏபிசி … Read more

#Breaking:உக்ரைனின் சுமி நகரில் குண்டுவெடிப்பு – 9 பேர் பலி!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 13 நாட்கள் ஆகி விட்டது.  ரஷ்ய படைகள்  முக்கிய நகரங்களில்  ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் … Read more

தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு..!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 13 நாட்கள் ஆகி விட்டது.  ரஷ்ய படைகள்  முக்கிய நகரங்களில்  ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் … Read more