வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானதே – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவுடார்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது  பேசிய அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பேசிய அவர்  இன்று திட்டமிட்டு என்ன பொய் செய்தி பரப்புகிறார்கள்; 68 சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு 7.5 சதவீதம் எனவும், சில … Read more

ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் திமுக – ஆர்.பி.உதயகுமார்..!

மதுரை குன்னத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் திமுகதான். இதை நான் உச்சநீதிமன்றம் வரை சென்று சொல்ல தயார். 100 ஆண்டுகள் வாழக்கூடிய ஜெயலலிதாவை பொய் வழக்கு போட்டு அர்ப்ப ஆயுளில் கொன்றுவிட்டு இன்று விசாரணை கமிஷன் என்று புத்தரை போல வேஷம் போடுவதை ஒரு அதிமுக அல்ல, ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும் ஆவேசமாகப் பேசினார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகராசி முதல்வர் மட்டுமல்ல … Read more

ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை -ஆர்.பி உதயகுமார் பேச்சு..!

எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் ஜாதகம் சரியில்லை என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் பரிசு விழாவில் பேசிய ஆர்.பி உதயகுமார்,  எதிர்க்கட்சி தலைவர் எதிர்க்கட்சித் தலைவரின் குணம்,  குணாதிசயங்கள் பற்றி அவர் உடன் பிறந்த சகோதரர் நேற்று தெரிவித்தார். மேலும், மதுரையில் நேற்று ஒரு புயல் வீசியது. எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக முடியாது என அவர் சகோதரரே கூறிவிட்டார். முதலில் உடன்பிறந்த சகோதரரை சரிக்கட்டுங்கள், பின்பு நாட்டை சரி … Read more

பண்ணை வீட்டில் சந்திப்பு.. அரசியல் காரணம் இல்லை.. ஆர்.பி.உதயகுமார்..!

நேற்று இரவு பெரியகுளத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆர்.பி. உதயகுமாருடன் 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய ஆர்.பி. உதயகுமார், துணை முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் தொடர்பாக ஆலோசிக்கவில்லை. உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை திறப்பு தொடர்பாக அவருடன் ஆலோசித்தேன். உசிலம்பட்டியில் சிலை அமையவுள்ள இடத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை(அதாவது இன்ற) பார்வையிட உள்ளார் என தெரிவித்தார்.  கடந்த திங்கள்கிழமை அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. … Read more