சொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது-தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,அமமுக மாபெரும் சக்தி. சசிகலாவை வெளியில் எடுக்க சட்டரீதியான முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம், நிச்சயம் வெளியே வருவார். சொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது.உண்மையான தொண்டர்கள், உண்மையான நிர்வாகிகள் எங்களோடு தொடர்ந்து பயணிப்பார்கள் என்று கூறினார்.

அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது-தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,ஜெயலலிதா தொடங்கிய அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது. கூட்டுறவு துறை அதிகாரிகளின் அலட்சிய நிர்வாகத்தால் அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருகின்றது . மூடப்பட்ட மருந்தகங்கள் மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

பின்வாங்கிய தினகரன் !வேலூர் மக்களவையில் அமமுக போட்டியிட போவதில்லை-தினகரன் அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதன் பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றார்.அங்கு அவருக்கு சென்றவுடனே இடைத்தேர்தலில் போட்டியிடும் … Read more

தமிழக எம்.பி-க்கள் ஒன்றுபட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிக்க வேண்டும் -தினகரன்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் மசோதா நிராகரிக்கப்பட்டிருப்பது சட்டப்பேரவைக்கும், தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது . நீட் தேர்வை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து, சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக எம்.பி-க்கள் ஒன்றுபட்டு, … Read more

அமமுக துணை பொதுச்செயலாளராக பழனியப்பன் மற்றும் ரெங்கசாமி நியமனம்-தினகரன் அறிவிப்பு

தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றார்.அங்கு அவருக்கு சென்றவுடனே இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.அதை பயன்படுத்தி செந்தில் பாலாஜி வெற்றியும் பெற்றுள்ளார்.மற்றொரு முக்கிய நிர்வாகியுமான தங்க தமிழ் செல்வனும்   அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றார்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் அமமுக … Read more

அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லதுதான்..!தினகரன் பரபரப்பு பேச்சு

அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லதுதான் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில் அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லது தான் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன் இனி அவர் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது மற்றும் நாஞ்சில் சம்பத், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகியது நல்லது என்று  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

தினகரனிடம் பொட்டிப்பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார்?- தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி

தினகரனிடம் பொட்டிப்பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார்? என்று தங்க தமிழ்ச்செல்வன்  தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு … Read more

அமமுக வாக்குகளை பிரிப்பதால் அதிமுக தோல்வி அடையும் – பாஜக மூத்த தலைவர் கருத்து

ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடை பெற்று  வருகிறது.ஆனால் சசிகலா குடும்பத்தினர் தனித்து விடப்பட்டனர்.இந்த சமயத்தில் தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதற்கு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.அதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெரும் என்றும்,தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை பெரும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக  ஈரோட்டில் பாஜக … Read more

நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது – தினகரன்

மூத்த தலைவர் நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார். சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து அவர் திடீரென அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.இந்த மனித நேயமற்ற செயல் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களால் இந்த விவகாரத்திற்கு  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலளார் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நல்லகண்ணு, தியாகி கக்கனின் மகனுக்கு … Read more

ஆட்சியை கலைக்க அ.ம.மு.க. – தி.மு.க. இணைய வேண்டும்! யதார்த்தத்தை தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்-தினகரன் பதில்

அ.ம.மு.க. – தி.மு.க. என இரண்டு கட்சிகளும் சேர்ந்தால் ஆட்சியை அகற்ற முடியும் என்ற யதார்த்தத்தை தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் காலியாக உள்ள 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மே19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. … Read more