விமர்சனங்களுக்கு செயலால் பதில் தருவார் உதயநிதி – முதலமைச்சர்

விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு. விமர்சனத்துக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெறுபவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை சிறப்பாக நடத்தி அனைவரது பாராட்டையும் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.

திருச்சியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.  திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!

திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி சென்ற சென்றடைந்தார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். முதல்வரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: திருச்சியில் ஜனவரி 2ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் ஜனவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி … Read more

தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் வளமிக்கவை – ஆளுநர்

சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் உரை. திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்திய சுதந்திர போராட்டம் மக்களை மையமாக கொண்டு ஆவணப்படுத்தப்பட்டு, திருத்தி எழுந்தப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய மொழிகளை விட நமது தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் வளம் மிக்கவை. ஆங்கில மொழிதான் உயர்ந்தது என்ற எண்ணம் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14க்கு ஒத்திவைப்பு!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 13 ரவுடிகளை பாலிகிராம் சோதனை செய்ய அனுமதி கோரிய வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜரானார்கள்.  பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் … Read more

#BREAKING: திருச்சியில் “பெரியார் உலகம்” – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

பெரியார் ஆய்வகம் மற்றும் பயிலகமான பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில், பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் … Read more

43 மூட்டை.. 7 லட்சத்திற்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள்.! திருச்சியில் தீவிர வேட்டை.!

திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை நீடித்து வருகிறது. அதனை விற்க தடை நீடிக்கிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனையில் கிலோ கணக்கில் அவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி தான் தற்போதும் ஓர் அதிரடி வேட்டை நடத்தப்பட்டுள்ளது.  திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் அதிக அளவில் குட்கா … Read more

அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – சி.டி‌.ரவி

நாளுக்கு நாள் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி‌.ரவி பேட்டி. பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி‌.ரவி இன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி செல்கிறது. பாஜகவில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சி தான். திமுக, காங்கிரஸின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது தான் என கூறினார். 5ஜி ஸ்பெக்ட்ரம் … Read more

துப்பாக்கி சுடுதல் போட்டி – நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தல்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் பதக்கங்களை வென்றது. திருச்சியில் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில், 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்  தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதில் சிறியவர்கள், … Read more