#BREAKING: வட கிழக்கு பருவமழை – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு!

வட கிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவில், திறந்தவெளியில் உள்ள கிணறுகள், இடியும் நிலையில் உள்ள சுவர்கள் ஆகிவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வளாகங்களில் … Read more

மாதந்தோறும் 1500 ரூபாய்… அக்.15 -ல் இவர்களுக்கு தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு!

அக்டோபர் 15 -ல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வானது அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் – பள்ளிக்கல்வித்துறை

பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை. தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரையில் காலை / மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு … Read more

#BREAKING: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்!

வரும் 30-ம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க ஏதுவாக வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் நடைபெறுகிறது. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை … Read more

1-5ஆம் வகுப்புக்கு அக்.12-ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்.12-ம் தேதி வரை நீட்டிப்பு என தகவல். ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும், 1 முதல் 5ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் … Read more

பள்ளிக் குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம், உடனடியாக இதை செய்யுங்கள் – ராமதாஸ்

அலட்சியம் காட்டாமல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல். பள்ளிக் குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 … Read more

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் ஏற்பட்டால் மாணவர்களை தனிமைப்படுத்த பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எச்1என்1 என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன. இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குகிறது. இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையான காய்ச்சல் இருமல், தும்மலால் பரவுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில், குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக … Read more

மருந்து தட்டுப்பாடு இல்லை.. காய்ச்சல், உடல் வலி இருந்தால்.. உடனே இதை செய்யுங்கள்- அமைச்சர்

காய்ச்சல், உடல் வலி, தலை வலி இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இந்த காய்ச்சலால் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்ப … Read more

தமிழகத்தில் 1-9 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுப்பு விட வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல். வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது … Read more

#BREAKING: பள்ளியளவில் காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ள அனுமதி – பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் பள்ளியளவில் காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி. தமிழகம் முழுவதும் பள்ளியளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் பள்ளிக்காலத்துறை உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை எவ்வித புகாருக்கும் … Read more