மாணவர்களே ரெடியா! டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள்.. பள்ளிக்கல்வித்துறை

half year exam

தமிழகத்தில் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடைபெறும் என அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிச.22ம் தேதி வரையும், 6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு … Read more

#BREAKING: அரையாண்டு விடுமுறை – சிறப்பு வகுப்புக்கு தடை!

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் … Read more

#BREAKING: 10ம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை

ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கை பற்றி விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளது. எனவே, ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என … Read more

பள்ளிகளில் தமிழ் பாடம் – அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ராகவன் … Read more

நம்ம ஸ்கூல் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம். நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்திட இத்திட்டம், இணையதளம் இன்று தொடங்கப்படுகிறது. மேலும், நம்ம ஸ்கூல் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி … Read more

“ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்“ – விஜயகாந்த் வலியுறுத்தல்

பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பனி நிரந்தரம் செய்யக்கோரி 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றுள்ளார். எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் … Read more

விளையாட்டு நேரத்தில் வகுப்புகள் எடுக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்தத் திட்டத்திற்காக … Read more

#BREAKING: திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

புயல் எச்சரிக்கை காரணமாக நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட எட்டு  மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி இருந்தார்.

#BREAKING: தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

புயல், கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் இந்த புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல், கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், … Read more

#BREAKING: காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தல். மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.