தமிழகத்தில் 29-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

rain

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று டிசம்பர் 23-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு … Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (டிசம்பர் 20)-ஆம் தேதி முதல் வருகின்ற  26-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான … Read more

கடல் சீற்றம்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

storm warning cage

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் நாளை மறுநாள் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி … Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும்.. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

HEAVY RAIN

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பருவமழையையொட்டி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தென் மண்டல தலைவர் … Read more

அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம்

India Meteorological Department

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.?

Heavy Rain

தமிழகத்தில் பருவ மழைக் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான அல்லது கனமழைப் பெய்து வருகிறது. இதற்கிடையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ம் தேதி நிலவும் என்று வானிலை மையம் … Read more

தொடரும் கனமழை..அடுத்த 3 மணிநேரத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Heavy Rain in Tamilnadu

தென்தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மற்றும் வடதமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழைப் பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14ம் தேதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (11.11.2023) முதல் 17ம் … Read more

இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது!

rain

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, இன்று தமிழ்கத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, … Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.!

Heavy Rain

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழைப் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 15ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு, … Read more

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

HEAVY RAIN

நேற்று மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அதன்படி, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன … Read more