#BREAKING: கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000, குடிசை இடிந்திருந்தால் ரூ.5,000 – அமைச்சர் அறிவிப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என அமைச்சர் விளக்கம். சென்னை எழிலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், வடகிழக்கு பருவமழையால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அமைச்சர் கூறுகையில், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். மழையால் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும். மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 … Read more

ஹெக்டருக்கு ரூ.75,000.. விவசாயிகளுக்கும், பொதுமக்களும் இழப்பீடு – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.75,000 வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களும் இழப்பீட்டினை உயர்த்தி வழங்க திமுக அரசுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து … Read more

மழை பாதிப்பு – நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்!

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய முதலமைச்சர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது. கனமழையால், விலை நிலங்கள் … Read more

#Red Alert: டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! – வானிலை மையம்

கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, தேனி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, … Read more

#RainUpdate: சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத மழை.! ஒரே நாளில் 44 செமீ.!

தமிழகத்தில் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் மிக கனமழைக்கு மேகவெடிப்பு காரணம் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வாங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக … Read more

தட்டச்சு தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த தட்டச்சு தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார். இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுத இருந்த நிலையில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, புதிய … Read more

#BREAKING: உருவானது புதிய காற்றழுத்த பகுதி.! தமிழகத்தில் கனமழை.! – வானிலை மையம் எச்சரிக்கை.!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வரும் 12-ம் தேதிக்குள் … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் என்பதால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் தென் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுகிறது. தமிழகம் நோக்கி நகரும் என்பதால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 11ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது … Read more

வடகிழக்கு பருவமழை; இதுவரை 26 பேர் பலி – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 23 கால்நடை உயிரிழந்துள்ளது என்று அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக … Read more

நவ.9 புதிய காற்றழுத்த பகுதி..தமிழ்நாட்டில் 14ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு. தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, வடகிழக்கு பருவமழை கடந்த 29-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் … Read more