விஜயபாஸ்கரை ஆதரித்து, விராலிமலையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்.!

விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். பொங்கலுக்கு ரூ.2,000 ரொக்கம் கொடுத்தது அதிமுக அரசுதான். திமுக ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தார்கள், ஒரு ரூபாய் கூட வழங்கியதாக சரித்திரம் கிடையாது என விமர்சித்தார். விராலிமலை தொகுதியில் … Read more

திமுகவுக்கு இந்த முறை அது எடுபடாது – முதல்வர் பழனிசாமி

அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது என கரூரில் முதல்வர் பழனிசாமி பரப்புரையில் தெரிவித்துள்ளார். கரூரில் அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொய் பேசியே ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தமுறை அது எடுபடாது என விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாங்கிய மனு என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக மீது எவ்வளவு குற்றசாட்டு கூறினாலும் அதை பொய் என நிரூபிப்போம் என்றும் … Read more

#BREAKING: தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!

சென்னையில் தேமுதிகவின் கொடிநாளையொட்டி பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரத்தை தொடங்கினார் தலைவர் விஜயகாந்த்.  தேசிய முன்போக்கு திராவிடர் கழகத்தின் கொடி நாள் விழா இன்று பிப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2000 ஆம் ஆண்டில் விஜயகாந்த் அவருடைய ரசிகர் மன்றத்தை தொடங்கியபோது இந்த நாளில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2005ம் ஆண்டு தேமுதிகவாக மாற்றப்பட்ட பின்னரும் ரசிகர் மன்றத்தின் கொடிதான் என்று இருந்த நிலையில், கொடி நாள் நிகழ்வை விருங்கப்பாக்கம் இருக்கக்கூடிய … Read more