“கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கும்!”- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக சட்டப்பேரவை கூட்டணி பற்றி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவு செய்வார்கள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தமிழக சட்டப்பேரவை கூட்டணி பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு – பொன். ராதாகிருஷ்ணன்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை, அதில் மாற்றமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் … Read more

இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து – அமைச்சர் சி.வி.சண்முகம்

இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், எம்ஜிஆரின் உண்மையான வாரிசு இரட்டை இலை சின்னம். ஆனால் அதற்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. இரட்டை இலை சின்னதாய் முடக்க மிகப்பெரிய சதித்திட்டம் செய்து வருகிறார்கள். தலைவர்கள் சிலர் ஏமாற்றலாம். ஆனால் தொண்டர்கள் ஏமாற்றமாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் … Read more

தபால் வாக்கு வழக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு. தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் அறிவித்தது. விருப்பப்படுவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு ஒன்று … Read more

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் – மு.க ஸ்டாலின் கடிதம்.!

அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று  தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் நாம் வெற்றி பெறப் போகிறோம் என்பதால் அதிகரித்தால் உள்ளவர்கள் தடைகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு நாளும் 500 வீடுகளுக்கு சென்று அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என முக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுகவை நிராகரிப்போம் என ஒவ்வொருவர் மனதிலும் அடிக்கோடிட்டு எழுதிக்கொண்டால் வெற்றி நம் பக்கம். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் … Read more

பாஜக பரப்புரை தொடங்கிவிட்டது – எல் முருகன்

வேல் யாத்திரை மூலம் பாஜகவின் பரப்புரை தொடங்கிவிட்டது என்று தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எல் முருகன் கூறுகையில், வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்துவிட்டோம். ரஜினி தேசிய சிந்தனை உள்ளவர். அவர் கட்சி தொடங்கிய பிறகு எனது கருத்தை கூறுகிறேன். கூட்டணி கணக்குகள் குறித்து தேசிய தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க பேசிய எல்.முருகன், நாளை 19-ம் தேதி … Read more

தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு.. தமிழகத்தில் கமலஹாசனுக்கு சின்னம் ஒதுக்கவில்லை..!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, டிடிவி தினகரன் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. … Read more

ரஜினியின் அவசர அறிக்கை ! அரசியலுக்கு வரப்போவதில்லை என மறைமுகமாக கூறுகிறாரா?

ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என மறைமுகமாக அவரே கூறுவதாக தெரிகிறது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் கொரோனா பரவலால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. மேலும் அந்த அறிக்கையில், ரஜினி அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் இருந்தது. ஆகவே கடந்த … Read more

#BREAKING: பொதுத்தேர்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

கொரோனா காலத்தில் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தலைமைத் தேர்தல் ஆணையம். தேர்தல் தொடர்பான பணிகள் போது ஒவ்வொருவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் பணிகள் நடைபெறும் இடங்களில் வெப்ப பரிசோதனை கருவிகள் வைத்திருக்க வேண்டும். கிருமி நாசினி, சோப்பு, சானிடைசர் போன்ற பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபடும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். தெர்மல் ஸ்கேனர் சோதனை நடத்தப்படும். கைகளை கழுவ சானிடைசர், சோப்பு வைக்கப்படும். மின்னணு … Read more