கன்னியாகுமரி இடைத்தேர்தல்.., விஜய் வசந்த் முன்னிலை..!

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 12,636 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.   இன்று, தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. இதில், கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் 46,886 வாக்குகளும், பொன் ராதாகிருஷ்ணன்  34,250 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 12,636 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 57 இடங்களில் முன்னிலை..!

இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. தற்போது தபால் வாக்குகள் முடிந்தநிலையில், மின்னணு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. திமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் திமுக 68, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக  தலா 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். அதிமுக கூட்டணி 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் அதிமுக 55, பாஜக, பாமக தலா 1 இடங்களிலும் முன்னிலையில் … Read more

#BREAKING: கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை!!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று முன்னிலை. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி 47, திமுக கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் குறிப்பாக கோவை தெற்கில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் … Read more

வாக்கு எண்ணிக்கை.., தாராபுரத்தில் பாஜக முன்னிலை..!

தாராபுரம் தொகுதியில் 479 வாக்கு வித்தியாசத்தில் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார். தாராபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் எல்.முருகனும் , திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்டனர்.  தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் 1,343 வாக்குகளும்,  கயல்விழி செல்வராஜ் 864 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் தாராபுரம் தொகுதியில் 479 வாக்கு வித்தியாசத்தில் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார்.

#BREAKING : தபால் வாக்கு எண்ணிக்கை.., திமுக கூட்டணி முன்னிலை..!

இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இந்நிலையில், தபால் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி 9 இடங்களிலும், அதிமுக கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

#ELECTIONBREAKING: கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்!!

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா தொற்று காரணமாக மாற்றம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கிய நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அத்தொகுதியில் புதிய தேர்தல் நடத்தும் அலுவலராக கண்ணன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் … Read more

#LIVE: தமிழகத்தில் வாக்கு முடிவுகள் இதோ…! சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

4:02:உதயநிதி வெற்றி|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி.50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 3:55-காட்பாடி தொகுதியில்  18-வது சுற்று முடிவில் 971 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை அ.தி.மு.க – 57828 தி.மு.க – 58,799 3:12-மார்கண்டேயன் வெற்றி|விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் 73,261 வாக்குகள் பெற்று வெற்றி .அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி … Read more

தொடங்கியது 30 மணிநேர ஊரடங்கு…மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகும் தேர்தல் முடிவு!!

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து நோய் பரவலை கருத்தில் கொண்டு … Read more

பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற செயல்களில் நாளை யாரும் ஈடுபடக்கூடாது -ஓ.பி.எஸ், இ.பி.எஸ்

பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என முதல்வர், துணை முதல்வர் அறிக்கை. தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையன்று (நாளை) பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது மற்றும் ஊர்வலம் போன்றவைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை, தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுயிருந்தது. இந்த நிலையில், பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற … Read more

வாக்கு எண்ணிக்கை: 35,836 போலீசார் பாதுகாப்பு…5,64,253 தபால் வாக்குகள் பாதிப்பு – சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலகர்களுக்கு பதிலாக மாற்றும் அலுவலர்கள் … Read more