#TNBudget2020 :காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்..அதில்,காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

#TNBudget2020 : அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி  நிதி ஒதுக்கீடு

அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு   நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது , அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு ரூ.500 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்  

#TNBudget2020 :மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது , 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

#TNBudget2020 : நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது,தமிழக பட்ஜெட்டில் நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

#TNBudget2020 :கீழடியில் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் புதிய அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது , கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

#TNBudget2020 : அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா-ரூ.75 கோடி ஒதுக்கீடு

 அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி  கேமரா பொருத்தப்படும்  என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது ,அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்புக்காக அரசுப்பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

#TNBudget2020 : பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு

2020 – 21 ஆம் நிதி ஆண்டிற்க்கு  பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181.73. கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது ,தமிழக பட்ஜெட்டில் 2020 – 21 ஆம் நிதி ஆண்டிற்க்கு  பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181.73. கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு : சட்டப்பேரவையில் விவாதிக்க மு.க.ஸ்டாலின் சார்பில் தனிநபர் தீர்மானம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தனிநபர் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை (பிப்ரவரி … Read more

2020-21 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் : நாளை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

நாளை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காலை 10 மணிக்கு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  பிப்ரவரி 1-ஆம் தேதி  மக்களவையில்  2020-2021-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து முடிந்த நிலையில்  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் … Read more

#BREAKING: பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி  மக்களவையில்  2020-2021-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து முடிந்த நிலையில்  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் பட்ஜெட் … Read more