விவசாயிகளை கவரும் வகையில் வேளாண் பட்ஜெட்!

MRK PANNEERSELVAM

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த சூழலில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி, வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே … Read more

திமுகவின் கனவு பட்ஜெட், கானல் நீர் பட்ஜெட்டாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்

EDAPPADI PALANISWAMI (1)

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு ஆரம்பித்து இந்த கூட்டத்தொடர் 12:30 மணியளவில் நிறைவு பெற்றது. இதனை அடுத்து அரசியல் கட்சியினர் பட்ஜெட் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்தவகையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட் குறித்து செஇதயலர் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை கூறி விமர்சனத்தை முன்வைத்தார். அதன்படி அவர் கூறியதாவது, இந்த … Read more

500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.!

Thangam Thennarasu - Film City

தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய  சட்டப்பேரவையில், 2 மணி நேரம் 7 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார். அதில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 150 ஏக்கரில் 500 கோடி ரூபாய் செலவில் சென்னை பூந்தமல்லிக்கு அருகே அதிநவீன திரைப்பட நகரம் … Read more

பத்தாயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும்.. ரூ.35,000 கோடி ஒதுக்கீடு!

womens self help groups

தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இன்று பேரவையில் பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியதாவது, 1989ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் விதைக்கப்பட்ட சுய உதவி குழு திட்டம் … Read more

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி!

government jobs

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்படி, 2 மணி நேரம் 7 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மருத்துவம், உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  அதுமட்டுமில்லாமல், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கான புதிய திட்டங்கள், சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. … Read more

பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்!

school education

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வைத்தார். அதில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more

2024-25 தமிழக பட்ஜெட்…முக்கிய சிறப்பம்சங்கள்…முக்கிய அறிவிப்புகள்.!

Tamil Nadu Budget 2024-25

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் கீழ், … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு!

kalaignar magalir urimai thogai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுகக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு என வெளியிடப்பட்டு வருகிறது. அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் அமைச்சர் பேசியதாவது, ஒரு சமூகத்தில் பெண்கள் அடையும் வளர்ச்சியை கொண்டே அச்சமூகத்தின் வளர்ச்சியை கொண்டே மதிப்பிட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். அந்த வழியில், ஆணுக்கு … Read more

AI, புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு!

AI

தமிழக அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வைத்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு..! தமிழக அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு வருகிறார். அதன்படி, செயற்கை … Read more

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

tn budget 2024

நடப்பாண்டுக்கான தமிழக அரசின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், தமிழக அரசின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. TNBudget 2024 Live : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்…. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதன்பின் தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான … Read more