2 மாடிக்கு மேல் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயம்!

புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் 2 மாடிக்கு மேல் இருந்தால் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் என சட்டப்பேரவையில் அறிவிப்பு. இரண்டு மாடிக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயம் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மாற்றுத்திறனாளி கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள், போக்குவரத்தை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் 2 மாடிக்கு மேல் உள்ள அனைத்து … Read more

#BREAKING: குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

குடிசை மாற்று வாரியம் இனி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, குடிசை மாற்று வாரியம் இனி ” தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” என பெயர் மாற்றம் … Read more

வலிமை சிமெண்ட் – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு. தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் முன் எழுத்தை தமிழில் எழுதும் நடைமுறை … Read more

#BREAKING: தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா 150 ஏக்கரில் உருவாக்கப்படும் என்று தொழில்துறை கொள்கை குறிப்பில் தகவல். தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் அருகே ஓரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா 150 ஏக்கரில் உருவாக்கப்படும் என்று தொழில்துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதுபோன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கரில் தோல் … Read more

ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு – நாளை சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்!

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கல். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கலாகிறது. தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்ட முன்வடிவை நாளை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்தத்திற்கான சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த சட்டப்பேரவையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் … Read more

திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? – மு.க.ஸ்டாலின்.!

காவிரி டெல்டா மாவட்டங்களை  பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதாவை எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். அதில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பி உள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை செய்யப்படுத்துவதால் நிலவளம் , நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் … Read more

காவிரி, மேகதாது, குண்டாறு, இலங்கை தமிழர்கள் என சட்டப்பேரவையில் ஆளுநர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்!

புத்தாண்டு முடிவடைந்த பிறகு இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.  இந்த சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசின் பல முக்கிய திட்டங்களை எடுத்துரைத்தார். 2020 புத்தாண்டைஅடுத்து இந்தாண்டின் முதல் தமிழக அரசு சட்டப்பேரவை கூடியது. இந்த சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அவர் உறுப்ப்பினர்கள் பங்கேற்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். அவர் கூறிய சிறப்பு அம்சங்கள் இதோ, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிறக்கு வலியுறுத்தப்படும். … Read more

நான் பெரும்பாலும், பெயர் குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்-ஸ்டாலின்

ஜெயலலிதா பெயரை  ஸ்டாலின் அடிக்கடி சொல்கிறார் .அதனை சபாநாயகர் நிறுத்த வேண்டும் என்று  சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.அதில்,  நான் பெரும்பாலும், பெயர் குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்.தவிர்க்க முடியாத சில தருணங்களில் தான் பெயரை குறிப்பிட்டிருக்கிறேன், அதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்களும், கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவையில் அது பதிவாகி இருக்கிறது. இதை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கூறுவது சரியல்ல என்று பதில் அளித்தார்.

மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது! ஓபிஎஸ் பதில்!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்க்கு பதில் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார். மேலும் திமுக சார்பில் கூறுகையில் மத்திய அரசிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டாமென்றால், நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசை வலியுறித்தியாவது தீர்மானம் போடுங்கள் என குறிப்பிடபட்டது. தமிழக … Read more

இமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்;தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்ன..??

ரஜினி கடந்த மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய ரஜினி செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை … Read more