சுமார் 1744.55 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற நம்பியாறு அணை திறப்பு…!

நெல்லை:மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நம்பியாறு அணையில் இருந்து இம்மாத விவசாய பாசனத்திற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் ராஜலட்சுமி தண்ணீர் திறந்து விட்டார்.இந்த நம்பியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் சுமார் 1744.55 ஏக்கர் திருநெல்வேலியில் உள்ள விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

உயர்நீதிமன்றம் டிசம்பர் 6-க்குள் தமிழக அரசு அறிக்கை தர வேண்டும் !கந்துவட்டி கொடுமை குறித்து…

                          கந்து வட்டி பிரச்சினை கடந்த சிலநாட்களாக நடந்த பிரச்சினையால் விறுவிறுப்பு அடைந்துள்ளது . நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட வழக்கில் டிசம்பர் 6ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சிந்து பூந்துரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் … Read more

ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் !கார்டுனிஸ்ட் பாலா…

சமீபத்தில் நடந்த  சம்பவம் குறித்து கார்ட்டுனிஸ்ட் பாலா  என்பவர் மீது நெல்லை நீதிமன்றத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில்  இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது .இதில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன்   வழங்கியது.   

தூத்துக்குடியில் மழை தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிவிப்பு … -tuty news

                                     Thoothukudi News: மழைகாலம்  தொடங்கியுள்ள நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும்  அவசர கால மையம் ஒன்றை Thoothukudi மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.பொது மக்கள் மழை தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்றும் கூறப்படுள்ளது .மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவலை … Read more

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு !-tuty news

Thoothukudi News: தூத்துக்குடியில் நடைபெரும் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி   விளையாட்டுபோட்டிகள்  நடைபெறுகிறது.வருகின்ற 7 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் ஆண்களுக்கான கூடைபந்து ,இறகுபந்து, கைப்பந்து ,கபடி,கோ-கோ ,நீச்சல் போட்டிகள் மற்றும் வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது .இந்த போட்டிகள் அனைத்தும் Thoothukudi-லும்  ,ஹாக்கி  போட்டி கோவில்பட்டியிலும் நடைபெறுகிறது .8 ஆம் தேதி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது .இதுகுறித்து  மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டார் .போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் அனைத்தும் … Read more

திருநெல்வேலியில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில்  மானிய விலையில் சர்கரையின் விலை உயர்த்தப்பட்டது .இது இன்று முதல் அமலுக்கு வந்தது .இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது .திருநெல்வேலியில்   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர் .ஏற்கனவே அனைத்து பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை விலையையும் உயர்த்தியதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் பரவுதலை கட்டுபடுத்தகோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நகராட்சியில் மனு…!

 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியை கண்டித்து டெங்கு காய்ச்சல் பரவுதலை கட்டுபடுத்தகோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நகராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது..

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – 2 பேர் உயிரிழப்பு;நெல்லையில் பரபரப்பு..!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நடுவக்குறிச்சியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அர்ஜூனன், லூர்து பிரின்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

நெல்லை மாவட்டத்தில், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டு தண்ணீர் கொட்டியது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, அருவியில், நீர் வரத்து சீராக உள்ளதால், பயணிகள் குளிக்க காவல் துறையினர் அனுமதி அளித்தனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பயணிகள் கூட்டம் … Read more

தூத்துக்குடி,நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி!!! சிறப்பு பூஜை ஆயுத்தம்!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மழை வேண்டி அடர்ந்த வனத்தில் சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து சப்த கன்னியருக்கு அருவி தலை பூஜை நடத்த பொது மக்கள் முடிவு செய்தனர். வனத்துறை அனுமதியுடன் சிங்கப்பட்டி, அயன்சிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்த 250 பேர் பூஜைக்காக 20 அர்ச்சகர்களை அழைத்து கொண்டு காட்டுக்கு சென்று பூஜை செய்தனர்.