தடுப்பணைகளால் புதிய ஆபத்து ஏரலில் கடையடைப்பு…!

தாமிரபரணி  ஆற்றில் ஆண்டுதோறும்  வரும் வெள்ளம் கரைபுரண்டு   ஓடி கடலில் கலப்பது  இயற்கையானது. வீணாக கடலில் கலக்கும் நீரை  தாமிரபரணி  ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து சேமிக்க வேண்டுமென பல்வேறு சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து  போராடிவந்தனர். இதன் எதிரொலியாக  பழமையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தொடர்ந்து  குரங்கணி,வாழவல்லான் பகுதிகளில்  தடுப்பணை அமைக்கப்பட்டது.தற்பொழுது ஆத்தூரை அடுத்த சேர்தபூமங்கலம்  பகுதியில் தடுப்பணை பணிகள் துரிதமாக நடந்துவருகிறது, பெருகி வரும் மக்கள் தொகைக்கு குடிநீர்  வழங்கவும்,விவசாயிகள்,புதிய ஆலைகளுக்கு தடையின்றி நீரை … Read more

ஒட்டப்பிடாரத்தில் கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி செல்லும் சாலையில் ஏ.கே.எஸ் நகரில்  அரசு மதுபானக் கடை  கடந்த சில மாதங்களாக செயல் பட்டு வருகிறது. மது கடையை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் மூன்றாவது நாளாக  ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள்,மாதர் சங்கத்தின் மாநில பொருளாளர் மல்லிகா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமாரவேல் ,மாவட்ட … Read more

கோவில்பட்டியில் மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கையாடல் செய்த அரசு உதவிபெறும் பள்ளியை கண்டித்து SFI தலைமையில் போராட்டம்…!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியான A.V உயர்நிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கையாடல் நடைபெற்றுள்ளது.மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தொடர்ந்து மாநகராட்சி சுகாரத்துறை நல அலுவலரிடம் கையொப்பம் பெற்றுவருமாறும் அலைகழித்து வந்துள்ளது. இதனை கண்டித்தும் முறைகேடுகளில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் கோவில்பட்டி ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் திரு.கணேசன் அவர்களிடம் மனு கொடுத்தனர். … Read more

துாத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு பகுதியில் செயல்படும் கரி அரைக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு…!

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர குழு  சார்பில்   கூறி உள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது..             துாத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு இந்திரா நகரின் தெற்கு பகுதியில் சிரட்டை கரியை அரைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்தக்  கரியை அரைப்பதால் அந்த பகுதி  முழுவதும் தூசியாக பரவி  அவை வீட்டிலும் துாசி … Read more

துாத்துக்குடி மஞ்சல்நீர்காயல் ஊராட்சி பகுதியில் 1 குடம் தண்ணீர் 10 ரூபாய் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் கூறி உள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது… தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் மஞ்சள்நீர்காயல் ஊராட்சி பகுதியில் 2500 பேர் வசிக்கின்றோம். எங்கள் பகுதியில் விவசாயம் ,உப்பள தொழிலார்கள் பலர் வசிக்கின்றனர். எங்களுக்கு வாழவல்லான் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வந்த குடி தண்ணீர் தற்போது நிறுத்தி உள்ளனர்.கடந்த 2 மாதமாக குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. … Read more

திருவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்பவர்களை கண்டித்து நேற்று திருவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அரசியல் கட்சி , இயக்கம், விவசாய சங்கங்கள் , சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் . கூட்டத்தை நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி M.S .ராஜா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள் . கூட்டத்துக்கு முன்னதாக தாமிரபரணி பாதுகாவலர் ஐயா நயினார் … Read more

முக்காணியில் குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக கடையடைப்பு பஸ்மறியலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று [7.8.2017.9.30 am  to 12.10 pm] முக்காணியில்  15நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து முக்காணி  பிரமுகர் M.கணேசன் தலைமையில் 2மணி நேரம் சாலை மறியல் நடந்தது,காலி குடங்களுடன் 1000 கணக்கான  முக்காணி  பொதுமக்கள் ஈடுபட்டனர் . கடையடைப்பும் நடந்தது. அரசு அதிகாரிகள்ஏரல் பாலத்திற்கு கீழ்   உள்ள  குழாய்களில் சமீபத்தில்  சேர்மன்சாமி கொடைவிழாவில் அடைக்கப்பட்ட அடைப்புகளை நீக்கியதும் வாழவல்லான் குடிநீர்  வடிகால் வாரியத்திற்கு தண்ணீர்  வர துவங்கியது.இன்று  மாலை 6 மணிக்குள் பம்பிங் … Read more

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை…!

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் டேய்சிங் தூத்துக்குடி அந்தோனியார்புரம் அருகேயுள்ள 3 சென்ட் பகுதியில் மர்ம கும்பலால் கொலை செய்யபட்டுள்ளார்.கொலையாளிகள் யார்? கொலை நடந்தற்கான காரணம் என்னவென்பதை போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் பூஜை நேரம் மாற்றம்..!

     சந்திர கிரகணம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 10:50 மணி முதல் நள்ளிரவு 12:44 மணி வரை நடக்கிறது. எனவே கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 05:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 05:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 04:00 மணிக்கு சாயரக்ஷை தீப ஆராதனை, 05:00 மணிக்கு தங்கரதம் புறப்பாடு, ராக்கால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. … Read more

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம்−ஓர் பார்வை…!

பனிமய மாதா அறிமுகம்:      முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடிக்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களில் ஒன்று பனிமய மாதா பேராலயம், வங்கக்கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயம், தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற கிறிஸ்த்துவ தேவாலயம், தூத்துக்குடி நகரின்  தெற்கு கடற்கரையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த பேராலயம் ஆன்மீக தலமாக மட்டுமின்றி சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. ஸ்தல வரலாறு:        1535−1537 ஆண்டுகளிலேயே மீனவ இன மக்கள் கிறிஸ்துவ மதம் … Read more