“கன்னியாகுமரியில் விமான நிலையம் ” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை…!

கன்னியாகுமரியில் விமான நிலையம்  அமைக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இயக்கம் நவீன உலகின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையான இந்தியாவில் விமான சேவையின் அளவை … Read more

“பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது;முதல்வருக்கு பாராட்டுக்கள்” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயிற்சி முடித்த 24 … Read more

பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய மீரா மிதுன் – விசிக சார்பில் புகார்!

பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய காரணத்திற்காக நடிகை மீரா மிதுன் மீது விசிக கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென்னிந்திய அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் தான் மீரா மிதுன். இவர் 6 அழகிப் பட்டம் வென்றது மட்டுமல்லாமல், தமிழ் திரை உலகில் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமாகிய இவர், அதனை தொடர்ந்து சமூக … Read more

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் தமிழகத்தில் மொழியியல் நூலகம் அமைக்கப்பட்ட வேண்டும் – விசிக தலைவர்!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் தமிழகத்தில் மொழியியல் நூலகம் அமைக்கப்பட்ட வேண்டும் என விசிக தலைவர் தோல்.திருமாவளவன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் “மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.தமிழ்நாட்டில் … Read more

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் – விசிக தலைவர் கோரிக்கை..!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் ஆடம்பரமான நிகழ்வுகளை தவிர்த்து, தங்களது வீடுகளில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். மேலும்,சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

பல்கலைகழகத் துணைவேந்தர் பதவி;ஆளுநரின் அதிகார வரம்புமீறல் தான் காரணமா? – விசிக தலைவர் கண்டனம்..!

தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதவர்கள் எந்த நம்பிக்கையில் மனுச்செய்கின்றனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பல்கலைகழகத் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் மனுச்செய்வது எந்த நம்பிக்கையில்?,இதற்கு  தமிழக அரசைப் பொருட்படுத்தாத மேதகு ஆளுநரின் அதிகார வரம்புமீறல் தான் காரணமா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைசி நாள்: “தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான … Read more

“சமூகநீதியைப் படுகொலை செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பு” – திருமாவளவன்..!

பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிர மாநில அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச … Read more

#Breaking:ஊடகவியலாளர்களுக்கு ரூ.5000 கொரோனா உதவித்தொகை -திருமாவளவன் வலியுறுத்தல்..!

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா உதவித்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சட்ட மன்ற உறுப்பினரும்,விசிக தலைவருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகையும் அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று,தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த உதவித்தொகையைப் பாரபட்சமின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் பரோலில் விடுவிப்பு- விசிக தலைவர் வலியுறுத்தல்..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக தண்டனை பெற்று வரும்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் அறிக்கை … Read more

வேல் யாத்திரைக்கு தடை – தொல். திருமாவளவன் பாராட்டு.!

பாஜக சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு தடை விதித்தற்கு தொல். திருமாவளவன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரையை நடத்த தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், வேல் யாத்திரைக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more