ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS — KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) November 12, 2019 தமிழக பாஜக இணையதள தலைவர் நிர்மல் குமார் ட்விட்டர் வாயிலாக பால்வளத்துறை  அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதாவது திருக்குறளை ஆவின் பால் … Read more

உலக பொதுமறையை எழுதிய திருவள்ளுவரையே கூண்டிற்குள் சிக்க வைத்துவிட்டீர்களே?!

உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை வைத்து தற்போது சில அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றன. ஒரு சில விஷமிகள் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று போலீசார் பந்தோபஸ்து அளித்து வந்தனர். அதன் பிறகு இந்து கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் பிள்ளையார்பட்டியில் உள்ள சிலைக்கு ருத்ராட்ச மலை அணிவித்து பாலபிஷேகம் செய்து பூஜைகள் செய்தார். இது மிகவும் சர்ச்சையானது. பின்னர் அங்கு மீண்டும் போலீசார் … Read more

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- விஜயகாந்த்

’திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தேமுதிக நிறுவன தலைவைர்  விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர்,அவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.இது மோதல்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்த காரணமாகிவிடும். தமிழகஅரசு உடனடியாக கவனம் செலுத்தி,இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் 2-2 pic.twitter.com/qwzEeNIreF — Vijayakant (@iVijayakant) November 6, 2019 இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தேமுதிக நிறுவன தலைவைர்  விஜயகாந்த் பதிவிட்ட … Read more

தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் -திருவள்ளுவர் விவகாரத்தில் பாஜகவை தாக்கிய சிதம்பரம்

தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு விபூதி மற்றும் காவி உடை அணிவித்து புகைப்படம் பதிவிடப்பட்டது.  இந்த விவகாரம் தமிழகத்தில் சூட்டை கிளப்பியுள்ளது. தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று தோன்றுகிறது. — P. Chidambaram (@PChidambaram_IN) November 5, 2019 இந்த … Read more

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு -தனிப்படை அமைத்து விசாரணை

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில்  உள்ள திருவள்ளுவர் மீது மர்ம நபர்கள் சாணி பூசினார்கள்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.பின்  திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல – கஸ்தூரி ட்வீட்

துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2/2 இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா ? #போயி_புள்ளகுட்டிங்கள_படிக்க_வையுங்க — Kasturi Shankar (@KasthuriShankar) … Read more

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – திருமாவளவன்

திருவள்ளுவர் சிலையில் சாணியை பூசிய  நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாணியை பூசினர்.இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறியும் வகையில், போலீசார்  விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், … Read more

இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் வள்ளுவம் -ஹெச்.ராஜா ட்வீட்

இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் வள்ளுவம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம்,பொருள்,இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். … Read more

திருவள்ளுவர் சிலை மீது சாணம் பூசிய மர்ம நபர்கள்! போலீசார் வலைவீச்சு!

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், சாணியை பூசியுள்ளனர். உலக புகழ்பெற்ற நூலான திருக்குறளை எழுதிய, திருவள்ளுவரை மதிக்க வேண்டிய இடத்தில், இவ்வாறு அவமரியாதையான முறையில் மர்ம நபர்கள் செயல்பட்டிருப்பது அப்பாகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறியும் வகையில், போலீசார் அப்பகுதியில் விசாரணையில் ஈடுபட்டு வருகினறனர்.

தமிழ் சமூகம் பொறுக்காது – சீமான் ஆவேசம்!

திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என பாஜகவினர் கருத்து தெரிவித்து வருவது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம், ‘ இது இந்திய நாடு, இந்து என கூறுகின்ற நாடு இல்லை. எனவும், திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. எனவும், தமிழர்கள் தற்போது நாகரீகமாக வாழ்ந்து வருவதால் வீதியில் இறங்கி … Read more