இலவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டாம்! அதிமுக பற்றி திருமாவளவன் சூசகம்

VCK: இலவு காத்த கிளி போல கூட்டணிக்கு யாரும் காத்திருக்க வேண்டாம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் திருமாவளவன் பங்கெடுக்கவில்லை. இந்த நிலையில், விசிக தலைமையகத்தில் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. Read More – … Read more

சிதம்பரம் எனது சொந்த தொகுதி… விட்டுக்கொடுக்க மாட்டேன்… திருமாவளவன் பேட்டி

thol.thirumavalavan

என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் நான் போட்டியிடுவேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது விசிகாவின் விருப்ப பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. Read More – அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 … Read more

தொகுதி பங்கீடு! 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்… விசிக தலைவர் பேட்டி!

thol thirumavalavan

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக – திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஏற்கனவே, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது. திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையிலான … Read more

திமுக அணியை எதிர்த்து போட்டியிடக்கூடிய அணிகள் இல்லை- திருமாவளவன்..!

Thirumavalavan

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர்  விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது” விசிக வின் வெல்லும் சனநாயகம் மாநாடு வெற்றி பெறுவதற்கு அரும்பாடு பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 100% ஒப்புகை சீட்டு தரக்கூடிய வசதியுடன் வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஒப்புகை சீட்டையும் ஒப்பீடு செய்து வெற்றி தோல்வியை அறிவிக்க … Read more

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி – திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்!

thirumavalavan

2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் கூட்டணி குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வழங்கியும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த … Read more

தமிழகத்தில் மூன்றாவது அணி அமையாது: திருமாவளவன் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது என தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, பாஜக கட்சி ஒரு பொருட்டே கிடையாது எனவும் இங்கு திமுக, அதிமுக தான் முக்கியம் எனவும் கூறியுள்ளார். திருமாவளவன் அளித்த பேட்டியில், “வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் பாஜகவுக்கு கடைசியாக இருக்கலாம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்து பாஜவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மூன்றாவது … Read more

இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரசார அரசியல் விழா – திருமாவளவன் கண்டனம்.!

Thirumavalavan - ramtemple

ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதையெடுத்து அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேக விழாவில் அயோத்தி நகரில் பிரபலங்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கலந்துகொள்கிறார். இந்த நிலையில், … Read more

‘சேரி மொழி’ சர்ச்சை… குஷ்புவுக்கு வலுக்கும் கண்டனங்கள்! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!

Viduthalai Chiruthaigal Katchi

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இதில், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவும் களமிறங்கினார். ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இது … Read more

ஆளுநரின் செயல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் காயப்படுத்துகிற அடாவடி தனமான போக்கு – திருமாவளவன்

thirumavalavan

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்கள் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. 10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய … Read more

அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது – திருமாவளவன்

thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அத்தைக்கு மீசை முளைத்தால், சித்தப்பா என்று அழைப்போம். அதேபோல தான் பாஜகவின் நிலை உள்ளது. பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்காது. பாஜக ஆட்சிக்கு வராது என்பது அவருக்கே தெரியும். அதனால் தான் வாக்குறுதிகளை அள்ளி இறைக்கிறார். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். அதை தொடருவோம். இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவோம். அதிமுக தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வது அவசியமானது. … Read more