சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26.10.2020 முதல் 15.3.2021 வரை, முதல் 51 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், … Read more

மின்கட்டணத்தை செலுத்த காலஅவகாசம்.. மின்வாரியம் அதிரடி!

மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பதாக மின் வாரியம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டத்தை தொடர்ந்து, தற்பொழுது மதுரை மற்றும் தேனியில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக, அம்மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை … Read more

தேனியிலும் இன்று முதல் முழு ஊரடங்கு.!

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.  தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் மதுரையில் ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: தேனியில் நாளை முதல் முழு ஊரடங்கு.! 

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு.! ஒரே ஒரு நாள் மட்டும்.!

தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரையில் முழு பொதுமுடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சில விதிமுறைகள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் … Read more

#BREAKING :தமிழ்நாட்டில் மீண்டும் பெண் சிசுக்கொலை.! தாய், பாட்டி கைது!

தேனீ மாவட்டம் அண்டிபட்டி அருகே உள்ள ராமநாதபுரம்  கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் ,கவிதா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மாதம் 3-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தை பிறந்த நான்கு ,ஐ ந்து நாள்களில் வயிற்று வலியால் குழந்தை உயிரிழந்ததாக கூறி வீட்டின் அருகே புதைக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் நடத்திய விசாரணையில் போலீசார் … Read more

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா ஆய்வகம் அமைக்க .. மத்திய அரசு அனுமதி..

காஞ்சிபுரத்தைச் சார்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரை சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது. நேற்று நமது  தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில கொரோனா வைரசால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள்.இந்தியா முழுவதும் … Read more

நீதிமன்ற உத்தரவையும் தாண்டி ஆவின் தலைவராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இன்று ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக பொறுப்பேற்று கொண்டார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த … Read more

300 அடி பள்ளத்தில் பருப்பு லோடுடன் தொங்கிய டாரஸ் லாரி.!

தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளி மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. தகவல் அறிந்து விபத்து இடத்திற்கு வந்த லோயர்கேம்ப் காவல்துறையினர் பருப்பு மூட்டைகளை இறக்கி கிரேன் மூலம் லாரியை மீட்டனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து டாரஸ் லாரி ஒன்று தேனிக்கு பாசிப்பருப்பு ஏற்றிக் கொண்டு வந்தது. தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளி மலைப்பாதையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் … Read more

லாரி – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தலைக்கவசம் அணிந்தும் உயிரிழப்பு..!

லாரி – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியாதல் தேனீ மாவட்டத்தில் கோர விபத்து. தலைகவசம் அணிந்துச் சென்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தந்தை. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருசக்கர வாகனம் சாலையில் இடறி சரக்கு லாரி டயருக்குள் விழுந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோடாங்கிபட்டி அடுத்த மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சின்னமனூரை நோக்கி இருசக்கர … Read more