மியான்மரின் முதல் நீர்மூழ்கி கப்பலை வழங்குகிறது இந்தியா… ஒற்றுமையை மேம்படுத்த நடவடிக்கை…

ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை நம் அண்டை நாடான மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்திய ராணுவத்தளபதி மனோஜ் நரவானேவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது, ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளதாவது, ‛நம் அண்டை நாடான மியான்மரின் ராணுவத்தில் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பல் ஆகும். அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி இது என்று  அவர் தெரிவித்தார்.

Exit mobile version