நிவார் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி..!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவார் புயல் வருகின்ற 25-ம் தேதி கரைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அமைச்சர் தங்கமணி செய்தியர்களிடம் பேசியபோது, நிவார் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின் துறை தயாராக உள்ளது.தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன, வருகின்ற 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது … Read more

மின்கட்டண கணக்கீடு : மாதந்தோறும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் – மின்துறை அமைச்சர் தங்கமணி,

மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று  மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து,  மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது  என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே … Read more

“அமைச்சர் தங்கமணி விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்”- மு.க.ஸ்டாலின்!

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், கொரோனா தோற்றால் … Read more

#BREAKING : அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி

  மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.இந்நிலையில்   மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் தங்கமணி, சென்னையில் தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  மியாட் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.அமைச்சர் அன்பழகனின் … Read more

ரத்தாகிறதா 100 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் ? அமைச்சர் தங்கமணி விளக்கம்

போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் .மேலும் தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். 

சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்.! 20,000 விவசாயிகளுக்கு முன்னுரிமை- மின்சாரத்துறை அமைச்சர் பேச்சு.!

தமிழக சட்டப்பேரவை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய, அமைச்சர் தங்கமணி மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து கூட்டத்தொடரில் ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் கேள்விகள் எழுப்பி விவாதத்தை நடத்தினர். அப்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, சோலார் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் எந்த … Read more

மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம்- அமைச்சர் தங்கமணி

மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விவசாய நிலத்தை அழித்து மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். மின்கோபுரம் அமைப்பதற்கு மாற்றாக புதைவடம் அமைக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் கூட இல்லை.அரசு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்றால் மின் கோபுரங்கள் அமைத்துதான் ஆக வேண்டும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது -அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,  2015-ஆம் ஆண்டு ஜூன் முதல்  தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக அம்மா அவர்கள் உருவாக்கி தந்தார்கள்.தமிழகத்தில் எப்பொழுதுமே தேவைக்கு ஏற்றவாறு புதிய மின் உற்பத்தி நிலையங்களாக இருந்தாலும் சரி ,துணை மின் நிலையங்களாக இருந்தாலும் சரி ஆரம்பித்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் எதிர்காலத்திலும் மின்வெட்டு பிரச்சினை இருக்காது.தேவையான அளவிற்கு மின்சாரம் உற்பத்தியாகி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை-அமைச்சர் தங்கமணி

பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்  என்று மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன், மின்கம்பம் பழுதானதால் தான் உயிரிழந்தார் என்பது தவறான தகவல் ஆகும் .மின்சார வாரியம் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த மின்கம்பம் பழுதடைந்த தாக எந்த புகாரும் கிடையாது.மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் தான் மின்கம்பம் பழுது ஏற்பட்டுள்ளது. காவல் … Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்- அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவையில் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது  அமைச்சர் தங்கமணி பேசினார்.அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ஊதிய உயர்வு ஏப்ரல் 2019 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும்  வட சென்னையில் அனல் மின் நிலைய நீர் தேவைக்காக ரூ.200 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்.