தளபதியின் செயலால் மகிழ்ச்சியில் அருவி படக்குழு

இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே தேவையில்லை. சமூக வலைதளங்களில் விஜயை யாரேனும் விமர்சித்தால், போதும் அவர்கள் மன்னிப்பு கேட்க்கும் வரை அவர்களை துரத்தி அவர்களை படாதபாடு படுத்தி விடுவார்கள். அப்படி இருக்க சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களிடம் வெகுவான பாராட்டுகளையும், தற்போது நிறைய விருதுகளை அள்ளி வரும் திரைபடமுமான அருவி திரைப்படத்தில், நடிகர் விஜயை கலாய்த்து சில காட்சிகள் இருந்தன. அதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தி ஆனார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த … Read more

‘தளபதி-63’ படம்-‘ஜில்லா’ இயக்குனருடன் இணையும் விஜய்…!!

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி-62’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தினை அடுத்து நடிகர் விஜய் தனது 63வது படத்தினை ‘ஜில்லா’ படத்தினை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தளபதி-64வது படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானாம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதில் அவர் ஒரு பணக்கார தொழிலதிபராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஜய் 63 அல்லது 64வது படத்தை தான் இயக்கவுள்ளதாக இயக்குனர் மோகன்ராஜா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஒவ்வொரு படம் முடித்தபிறகும் நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக்கொள்வோம். இந்த முறை விஜய் கொஞ்சம் சீரியசாக பேசினார். நான் அவரின் 63வது அல்லது 64வது படத்தை இயக்கப்போகிறேன்” என ஒரு விழாவில் … Read more

டாப் கியரில் விஜய், கடுமையாக போராடவேண்டிய கட்டாயத்தில் அஜித்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓபனிங் படு பிரமாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸை நிரப்ப்புவது அந்த படத்தின் கதை களமும், பார்வையாளர்களின் பாசிடிவ் ரியாக்ஸனும் தான். அந்த வகையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கதைகளத்தை தேர்வு செய்து, பாக்ஸ் ஆபீஸில் யார் கிங் என்பதை மொத்த வசூல் விவரமானது காட்டி கொடுத்து விடுகிறது. அந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பின்வருமாறு, என்றும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். காபாலி படம் மூலம் மட்டுமே 290 … Read more

பல சரித்திர தலைவர்கள் மத்தியில் தளபதி விஜய்!!!

சினிமாவில் கால்பதித்த ஆரம்ப கால கட்டத்தில் பல சோதனைகளையும், பல அவமானங்களையும் தாங்கி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸின் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய். இவரின் சினிமா பயணங்களை பற்றிய புத்தகம் ஒன்று “விஜய் ஜெயித்த கதை ” என்ற பெயரில் ஜனவரி மாதம் வெளியாகி இருந்தது. இந்த புத்தகத்தை சபீதா ஜோசப் என்ற எழுத்தாளரால்  எழுதப்பட்டு, ரசிகர்கள் பலராலும் வாங்கி படிக்கப்பட்டது. திருநெல்வேலியில் நாளை நமதே என்ற … Read more

விஜய் பேசிய வீடியோ 'மதுரவீரன்' படத்தில் வெளியீடு

கடந்த வருடம் தமிழக இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டேடுத்தனர். இதற்க்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது இளைய தளபதி விஜய் தனது ஆதரவை தெரிவித்ததுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அடுத்தவாரம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்து வெளிவரவிருக்கும் படம் மதுரவீரன். இப்படம் ஜல்லிகட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் பேசிய வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இது தளபதி ரசிகர்களை … Read more

'மெர்சல்' படத்திற்கு மீண்டும் கிடைத்த கௌரவம்.., நடந்தது என்ன…??

இப்படம் வெளியாகும் முன்பே பல இணையதள சாதனைகள் செய்து வந்த ‘மெர்சல்’ படம் 2017 இறுதியில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பல சிறப்புகள் இப்படத்திற்கு அமைந்தது. இதில் ஆளப்போறான் தமிழ்ன் பாடல் மிக முக்கியமானது. தற்போது மீண்டும் ஒரு பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. நார்வே நாட்டில் நடந்து வரும் தமிழ் படங்களுக்கான திரைவிழாவில் விருதுகள் கிடைத்துள்ளது. அதன் படி, மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கிற்கு விருது கிடைத்துள்ளது. மேலும் நீதானே பாடலுக்காக ஸ்ரேயா … Read more

'விஜய் 62' படம் குறித்து எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-62’ படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் விஜய் 62வது படம் பற்றி பேசும்போது, “முருகதாஸ் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் கதையாக இருக்கும். இப்படமும் அப்படி ஒரு பிரச்சனை ஒரு பெரிய நடிகரை வைத்து பேசப்படுகிறது” என்று கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதியின் 62-வில் இணையும் பிரபல எழுத்தாளர்- புதிய தகவல்

சன் பிக்சார்ஸ் தயாரிப்பில் எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர் இல் நடக்கிறது. இப்படத்திற்கு எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் வசனகர்த்தாவாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார். இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் விஜய்க்கு அடுத்து நான்தான் என நிருபிக்கும் சிவகார்த்திகேயன் : வேலைக்காரன் பிரமாண்ட வசூல்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இப்போது விஜய் அஜித் திரை மார்கெட்டை தொட நெருங்கி கொண்டிருக்கிறார் நடிகர் சிவகர்த்திகேயன்.  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுகொண்டிருக்கும் திரைப்படம் வேலைக்காரன். இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாது திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமே சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சிங்கம் 3 ஆம் பாகத்தின் வசூலை இப்படம் முறியடித்துள்ளது. விவேகம் திரைப்படம் தமிழகத்தில் … Read more