#Breaking:பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதிப்பெயர் நீக்கம் …!

தமிழகத்தில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இதற்கிடையில்,பாடநூல் கழக தலைவராக ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக  ஒன்றிய அரசு என இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் … Read more

“இனி பாடப்புத்தகத்தில் இவை இடம் பெறாது” – கேரள முதல்வரின் அறிவிப்பு-கனிமொழி வரவேற்பு…!

பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான வார்த்தைகளும் கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறாது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததை,எம்.பி. கனிமொழி வரவேற்றுள்ளார். கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,மாநிலத்தில் பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகளை மேம்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான சொற்களும் இடம்பெறாத வகையில்,கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் … Read more

#Breaking:2021-22ம் கல்வி ஆண்டுக்கான இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்..!

2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்கள் வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை பரவலானது தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.மேலும்,கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று வசதிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார். அந்த வகையில்,2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் விரைவில் … Read more

தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்.உரிமம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம். தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை.பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை இருந்தால் உடனே சரிசெய்யப்படும். 2 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும். பாட புத்தகங்கள் அனுப்புவதில் குறைபாடுகள் இருக்குமானால் உடனே … Read more