ரூ.83,000 கோடி வரி செலுத்த உள்ளேன் – எலான் மஸ்க் ட்வீட்!

சுமார் ரூ.83,000 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக அறிவித்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) வரி செலுத்த உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ், … Read more

இந்தியாவில் சொந்த விற்பனை நிலையங்கள்…டெஸ்லாவின் அதிரடி முடிவு…!

இந்தியாவில் முழுமையாக சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் தலைமையிலான மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக பல சாலைத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும்,அதன் வாகனங்களை விற்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதாவது,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் … Read more

Elon Musk’s Tesla:இந்திய முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. டெஸ்லா நிறுவனத்திற்கு ஒப்புதல்..!

டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு கார் மாடல்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவில்,பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால்,பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், எலக்ட்ரிக் வாகனம் மற்றும் கார் தயாரிப்புகளில் உலகளவில் முன்னிலையில் உள்ள நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க திட்டமிட்டு ,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக … Read more

டெஸ்லா நிறுவனம் தயாரித்த மனிதன் வடிவிலான ரோபோ…!

டெஸ்லா நிறுவனம் தயாரித்த மனிதன் வடிவிலான ரோபோ. இன்று வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், மனிதனுடைய வேலைகளை இலகுவாக்குகிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில், மனிதனுக்கு ஈடாக செயல்படக்கூடிய மனித ரோபோக்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் மனிதவடிவிலான ரோபோக்களை தயாரித்து வருவதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இந்த மனித வடிவ ரோபோவுக்கு டெஸ்லாபோட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ 5 அடி, 8 இஞ்ச் உயரம் கொண்டது. மேலும் அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு … Read more

“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” – எலான் மஸ்க்

“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ. 100 ஐ தாண்டியுள்ளது, மேலும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கி வருகிறது. இதனால் பலரது வாகனங்களை வெளியில் எடுத்து செல்லமுடியாமல் வீட்டிலேயே வாகனங்களை முடக்கி வைக்கும் நிலை வந்துள்ளது. இதனால் பலரும் சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். மேலும், … Read more

டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் நிறுவனம் தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு;25,000 புதிய வேலைவாய்ப்புகள்…!

டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் (ஈ.வி) தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு செய்வதால் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார். எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ட்ரைடன் (ஈ.வி) ,தெலுங்கானா மாநிலத்தின் சங்கரெட்டி மாவட்டத்தில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பாக,தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அமைச்சர் … Read more

மின்சார கார் உற்பத்தி மூலம் டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் உச்சத்தை எட்டியுள்ளது…!

டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை விற்பனை செய்ததாகவும்,இதனால்,10.3 பில்லியன் டாலர் சம்பாதித்து வருவாயை உயர்த்தியதாக தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடைந்த நிலையில்,பல நிறுவனங்கள் தங்கள் வருவாயை கணக்கிட்டு வருகின்றன.அதன் வரிசையில்,அமெரிக்க மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தனது வருவாயை கணக்கிட்டு கூறியுள்ளது. அதன்படி டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை 10.3 பில்லியன் … Read more

டெஸ்லாவின் புதிய நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை..! காலேஜ் டிகிரி தேவையில்லை..!

டெஸ்லா அதன் புதிய நிறுவனத்தில் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த முடிவுசெய்துள்ளது.ஆச்சரியம் என்னவென்றால் இங்கு வேலைக்கு சேர காலேஜ் டிகிரி கட்டாயமில்லை. டெஸ்லா நிறுவனம்,டெக்சாஸில் உள்ள அதன் இரண்டாவது அமெரிக்க கார் தொழிற்சாலையான ‘ஜிகாஃபாக்டரிக்கு’ 2022ம் ஆண்டிற்குள் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அதிகாரிகளில் ஒருவரான கிறிஸ் ரெய்லி, “டெக்சாஸ் ஜிகாஃபாக்டரியில் உற்பத்தி, டிசைன், கட்டிடக்கலை, கட்டுமானம் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்கள் உள்ளன.ஆகையால் யார் வேண்டுமானாலும்  வேலை செய்ய வாய்ப்புகள் உள்ளன.எனவே … Read more

அப்படியா! டெஸ்லா பின்னடைவா? அமேசான் தலைமை முன்னிலையா? 230 பில்லியன் டாலர்கள் இழப்பு

டெஸ்லாவின் தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் மார்ச் 8 திங்கள் கிழமையான இன்று 27 பில்லியன் டாலர்களை இழக்க நேர்ந்துள்ளார்.ஏனெனில் வாகன தயாரிப்பாளர்களின் பங்கு மதிப்புகள் தொழில்நுட்ப பங்கு மதிப்புகளின் விற்பனையின் காரணமாக சரிந்ததால் அவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு  157 பில்லியனாக குறைந்துள்ளதனால் அமேசான் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸை விட 20 பில்லியன் டாலர் குறைந்து பின்னிலையில் உள்ளார்  என்றும்,அமெரிக்க இதழான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதனால்  டெஸ்லாவின் … Read more

அடுத்த ஆண்டு விற்பனையத் தொடங்க உள்ள டெஸ்லா – மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான டெஸ்லா ,2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையத் தொடங்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர்  நிதின் கட்கரி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஏராளமான இந்திய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன.அவை மிகவும் மலிவாக இருக்கும் .ஆனால் தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லாவைப் போலவே மேம்பட்டவை.டெஸ்லா முதலில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும். பின்னர் கார்களுக்கான  உற்பத்தியைப் தொடங்கும்.”ஐந்து ஆண்டுகளில் … Read more