காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்!!சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழப்பு!!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்  தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது. அதேபோல் ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரி விவகாரம்:ஹெல்மெட் கட்டாயம் என்று கூறுவது தவறா!!!துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி விவகாரத்தில்  மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறானது என்று  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில்,நியாயவிலைக்கடை பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு தேதி குறித்து கடிதம் அனுப்பிவிட்டோம்.ஹெல்மெட் கட்டாயம் என்று கூறுவது தவறா…எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.முதல்வர் தர்ணாவில் ஈடுபடுவது முறையான செயலா? ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தவறா? என்று  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்றத்தில் இருந்து விடுதலை…..முருகன் மனைவி நளினி உடல்நிலை மோசம்…!!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டுமென்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் சிறையில் இருக்கும் முருகன் எங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று உண்ணாவிரத … Read more

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு !!ஆண் நாய்க்கு தாலி கட்டிய தர்ம ரக்ஷன சபா மாநில தலைவர்!!!5 பேர் கைது

ஆண் நாய்க்கு தாலி கட்டியதால் தர்ம ரக்ஷன சபாவின் மாநில தலைவர் செல்வம்  உள்ளிட்ட 5 பேரை  காவல்த்துறையினர்  கைது செய்துள்ளனர். காதலர் தினம் என்பது, தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது தான், காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது. காதலை புனிதமாக எண்ணுபவர்களும் உண்டு, காதலை கேவலமாக எண்ணுபவர்களும் உண்டு. குறிப்பாக இந்தியாவில் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில்  செல்வம் என்பவர் சென்னையில்  காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு … Read more

சூர்யாவின் என்.ஜி.கே டீசருக்கு வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள்…!!

நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படத்தின் டீசருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே  படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தனுஷ், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், சித்தார்த் ஆகியோர் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த படம் அரசியல் படமாக உருவாகியுள்ளது.

U/A சான்றிதழ் பெற்ற நயன்தாராவின் ஐரா படம்….!!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வளம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள விசுவாசம் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில், சர்ஜுன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா படம் யு/ஏ’ (U/A) சான்று பெற்றுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளராகும் நடிகை நயன்தாராவின் காதலன்….!!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வளம் வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்துள்ள விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார். இந்த படத்தை சித்தார்த் நடித்த திகில் படமான ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இதனையடுத்து, இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

ஏர்செல்லை போல முடங்கும் நிலையில் பிஎஸ்என்எல்!!ரூ.31.287 கோடி நஷ்டம்!!

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூடு விழாவை நோக்கி செல்கிறது. ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது. இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறினர். தற்போது … Read more

மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சி – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான முதல்வர், நிறுவனம் முழு வீச்சில் செயல்பட மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில் அளித்தார்.அதில், மத்திய அரசு ரூ8 கோடி நிதி ஒதுக்கவேண்டி … Read more

காதலர் தினத்தை கொண்டாட உதகையில் குவிந்த பயணிகள் !!

காதலர் தினத்தை கொண்டாட உதகையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காதலர் தினம் என்பது, தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது தான், காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது. காதலை புனிதமாக எண்ணுபவர்களும் உண்டு, காதலை கேவலமாக எண்ணுபவர்களும் உண்டு. காதலர் தினத்தை அன்புக்குரியவர்கள் தினம் என்று கூட அழைப்பதுண்டு. இந்நிலையில் காதலர் தினத்தை கொண்டாட உதகையில் ஏராளமானோர் குவிந்ததால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் … Read more