#BREAKING : தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு தமிழக அரசு அனுமதி

 நாளை முதல்  தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.ஆனால் மே 3- ஆம் தேதிக்கு பிறகு 3 -ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.சில தளர்வுகள் மட்டும் இந்த சமயத்தில் அளிக்கப்பட்டது.  தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை … Read more

முகத்தில் வரும் பருக்களை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க!

முகப்பருவை போக்குவதற்கான வழிமுறைகள். முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் ஆண்கள் என அனைவர்க்கும் இருப்பது வழக்கம் தான். இந்நிலையில், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் ஹார்மோன்களின் வளர்ச்சிக்கேற்ப பருக்கள் தூண்டப்படுகிறது. இது இளம் வயதினர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் வருகிறது. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக … Read more

மகாராஷ்டிராவில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் உலகெங்கும் மிரட்டி வருகிறது. இந்த வைரஸை தடுக்க ஒவ்வொரு நாடும் பல முயற்சிகளை செய்து  வருகிறது.  இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. 

#Breaking: தூக்கு தண்டனை உறுதி -குற்றவாளி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் … Read more

இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா?

அதலக்காயில் உள்ள அற்புதமான குணங்கள் : இன்று நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகளை உண்பதை விட, நமது நாவுக்கு ருசியான உணவுகளை தான் விரும்பி உண்ணுகிறோம். இந்த ருசியான உணவுகளை விரும்பி உண்பதால், நமது உடலில் பல வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் அதலக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள் பற்றி பாப்போம். இந்த காய் எந்த நாட்டிலும் விளைவதில்லை. இது நமது  மட்டுமே விளைய கூடிய காய்களில் ஒன்று. … Read more

அவதூறு வழக்கு -நாளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு..!

அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சி துறை முறைகேடு தொடர்பான அறிக்கை அடிப்படையில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கின் விசாரணைக்காக நாளை ஆஜராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால்  நாளை (பிப்ரவரி 24-ஆம் தேதி) நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க அளிக்க கோரியும்,வழக்கை ரத்து செய்யக்கோரியும்  ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அந்த மனுவில்,அமைச்சர் … Read more

இன்று முதல் நடைபெறுகிறது திமுக உட்கட்சித் தேர்தல்.!

திமுகவில் உட்கட்சி தேர்தல் இன்று தொடங்குகிறது .முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.  இது தொடர்பாக திமுக  தலைமை வெளியிட்ட அறிக்கையில், திமுக உட்கட்சி 15-வது பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறுகிறது .1949-ஆம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்பு முதல் தலைமை கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக ,இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க சிறப்புக்குரிய இயக்கம் திமுக ஆகும்.கழக சட்டத்திட்டங்களின் படி ,பல கட்டங்களாக கழக … Read more

சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என்றால் இதை பண்ணுங்க

சாப்பிட்ட உணவு சேர்ப்பதற்கான வழிமுறைகள்.  இந்த நாகரீகமான உலகில் நாம் உணவு, உடை, நடை என அனைத்திலும் நாகரீகமாக இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு. இன்று நமது முன்னோர்களுடைய அணைத்து உணவு கலாச்சாரங்களையும் நாம் மறந்து விடுகிறோம். நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சார உணவு முறைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது. இன்று, அனைவரும் மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகள் நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை உண்டு பண்ணுவதுடன், … Read more

குழந்தைகளுக்கு பிடித்தமான நீர் தோசை செய்வது எப்படி?

சுவையான நீர் தோசை செய்யும் முறை.  குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக சாப்பிடுவதை தான் விரும்புவதுண்டு. இதனால் அதிகமாக குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் செய்து கொடுப்பதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், குழந்தைகள் விரும்பி உண்ண கூடிய நீர் தோசை செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை அரிசி – 1 கப் உப்பு எண்ணெய் தண்ணீர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். … Read more

யாருக்காவது ஷாக் அடிச்சிட்டுனா உடனே இதை செய்யுங்க, ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க!

வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் எப்பொழுது கவனம் காட்டவேண்டியது இந்த மின்சாரத்திடம் தான். செய்ய வேண்டியவை: ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து … Read more