இன்று நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.!

நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

சிவாவோடு மீண்டும் இணைகிறாரா அஜித்….?

தல அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக உச்சத்துக்கு சென்றுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம். இந்நிலையில் அஜித் அவர்கள் சிவாவுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருடன் இணைந்து பிங்க் ரீமேக் படங்களில் அஜித் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை சதுரங்கவேட்டை வினோத் தான் இயக்குகிறாராம். ஆனால் அவர் இதுகுறித்த உறுதியான தகவலை வெளியிடவில்லை. இதனையடுத்து, அஜித்தின் ஐந்தாவது படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினோத் குறித்த உறுதியான … Read more

இன்று சட்டக்கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு …!

இன்று சட்டக்கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என்று  சட்டப்பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பல்கலைகழக துணை வேந்தர் கூறுகையில், கனமழை காரணமாக சென்னை சீர்மிகு சட்டப்பள்ளி, தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளில் இன்று  நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது .ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சட்டப்பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெம்செல் மூலம் சேதமடைந்த திசுக்களைச் சரி செய்யலாம்….சீன விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!

ஸ்டெம் செல் எனப்படும் தொப்புள்கொடி மூலம், சேதமடைந்த திசுக்களை சரி செய்ய முடியும் என்பதை சீன விஞ்ஞானிகள், உலகிலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளனர்.குழந்தை பிறந்தவுடன், தொப்புள் கொடியில் உள்ள ரத்தத்தை சேகரித்து வைப்பதன்மூலம், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரத்த அணுக்கள் பலவற்றில் ஹெமாட்டோ பயாட்டிக் ஸ்டெம் செல்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளை முழுவதுமாக, குறிப்பிட்ட உறுப்பு அமைப்பிற்குள் செலுத்துவதற்கு, ஒருவகை செல்களை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த ஆராய்ச்சியின் மூலம், … Read more

திருப்பதி குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை…பக்தர்களுக்கு சிரமம்..!!

திருப்பதி திருமலையில் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன்கூடிய மழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.  வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. விடாமல் பெய்துவரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள், குழந்தைகள் குளிர் தாங்கமுடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். dinasuvadu.com

தஞ்சை மக்களுக்கு அரியலூரில் இருந்து நிவாரண பொருட்கள்…!!

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட மக்களுக்கு அரியலூரில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. வீடுகள், உடைமைகள், பயிர்கள், கால்நடைகள் என அனைத்தையும் இழந்து ஏராளமான கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த நிலையில், அரிலூர் மாவட்ட அதிமுக சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள், தஞ்சை மாவட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில், … Read more

உரம் மற்றும் விவசாய பொருட்களுக்கு மானிய விலை…விவசாயிகள் மகிழ்ச்சி..!!

உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதால் மகசூல் அதிகரிக்கும் என மதுரை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு நல்ல மழை கிடைத்துள்ளதாலும், பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், சோழவந்தான் அருகே உள்ள மேலகால் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நாற்று நடும் பணியில் இறங்கியுள்ளனர்.இந்த நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் … Read more

பணமதிப்பிழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்….மத்திய அரசு தகவல்..!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகள் மோசமான பாதிப்பை சந்தித்ததாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நிதிவிவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், லட்சக்கணக்கான விவசாயிகள் விதைகளை வாங்க முடியாத நிலைக்கும், விளைப்பொருட்களுக்கு உரம், மருந்துக்களை வாங்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கரையானை அழிக்க நாம் விஷம் கலந்த பூச்சி மருந்தை பயன்படுத்துகிறோம், அதே … Read more

கனமழை எச்சரிக்கை…விழுப்புரம் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!!

கனமழை எச்சரிக்கை…விழுப்புரம் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். DINASUVADU

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!!ஆட்சியர் அறிவிப்பு..!

 திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை – ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார் மேலும் நிவாரண முகாம்கள் தவிர மற்ற கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். DINASUVADU