நாளையுடன் முடியும் 3 நாள் சுற்றுப்பயணம்! டெல்லிக்கு திரும்பும் பிரதமர் மோடி

நேற்று சென்னைக்கு வருகை தந்த அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்த மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் பயணமாக ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பிரதமர் வருகை தந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்ட … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இன்று கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 12 மாவட்டங்களில் இன்று கனமழை.! வானிலை ஆய்வு … Read more

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13, 25ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

RATION SHOP

தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 13, 25 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஞாயிற்று கிழமை (நவம்பர் 12ஆம் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் என்ற முடிவில், மக்களுக்கு பொருட்கள் … Read more

மக்களே கவனம்…தமிழகத்திற்கு நாளை ‘ஆரஞ்ச்’ நிற அலர்ட்!

rain orange update

வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதில் இருந்து தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ‘ஆரஞ்ச்’ நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை … Read more

Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை!

heavy Rain Alert

வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதையடுத்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு முதல், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், இன்று காலை முதல் சென்னையின் எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 5 நாட்களுக்கு கனமழை வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, … Read more

தமிழகம் முழுவதும் இன்று ‘கிராம சபை’ கூட்டம்!

Grama Sabha

தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்த கூடாது என்று கூறியுள்ளது. மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்திற்கான செலவின … Read more