புதிய பாடத்திட்டம் தயாரிக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு

தமிழகத்தில் உள்ள மாநில அரசின் சார்பாக பள்ளிக்கல்வி திட்டத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.மேலும் வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். … Read more

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவிப்பு!

இன்று நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல் :- வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி ரயில்வே பணிகள் … Read more

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்!

  தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி … Read more

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை … Read more

இலங்கை அரசின் புதிய மீன்பிடிச் சட்டத்தில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என மக்களவையில் எம்.பி. அன்வர் ராஜா

இலங்கை அரசின் புதிய மீன்பிடிச் சட்டத்தில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என மக்களவையில் எம்.பி. அன்வர் ராஜா கேட்டுக் கொண்டார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு…

குரங்கனி தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது கணவர் விபின் சம்பவதன்று உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

ஒக்கி புயலால் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி…!

சென்னை : தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல் ஒக்கி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்க…!!

நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது குறைந்துவிட்டது  என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்…!!

உங்கள் வீட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்றும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள். இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. எனினும் அது மீண்டும் தலை தூக்காமல் இருக்க இந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் தொடரவேண்டியுள்ளது.

ஆந்திராவில் படுகொலை செய்யபட்ட தமிழக மலைவாழ் மக்களுக்கு நீதி கேட்டு போராட்டம்…!!

மலை வாழ் மக்களை பாதுகாக்க கோரியும் ஆந்திராவில் படுகொலை செய்யபட்ட தமிழக மலைவாழ் மக்களுக்கு நீதி கேட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர்  எஸ்.பாலா மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கத்தின் மாநில செயலாளர்  பிரவீன்குமார் உள்ளிட்டு ஏராளமான வாலிபர்கள் பங்கெடுத்தனர்.