என்னால் முடிந்தது 2 லட்சம்…200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிதியுதவி செய்த KPY பாலா.!

KPY Bala

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் வழங்கியுள்ளனர். இதுகுறித்து KPY பாலா பேசுகையில், “2015-ல் வெள்ளம் வந்தபோது உதவி செய்ய வேண்டும் என்ற … Read more

கண்டெய்னர் சீலை கூட அகற்றாமல் நூதன திருட்டு.. 7 பேர் கொண்ட திருட்டு கும்பல் அதிரடி கைது.!

தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கன்டெய்னரில் உள்ள 98 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 7 பேர் கொண்ட கும்பல் தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்கு துறைமுகம் வாயிலாக கண்டெய்னர் மூலம் பொருட்கள் அனுப்பப்படும். அப்படி, தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக கண்டெய்னர் பெட்டியில், மருந்து பொருட்கள் இருந்துள்ளன. இந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை கூட உடைக்காமல், நூதனமாக அதனுக்குள்ளே இருந்த 98 … Read more

தாம்பரத்தில் மழை,வெள்ள பாதிப்பு-மீட்பு பணிக்காக 8 அதிகாரிகள் நியமனம்!

தாம்பரம்:மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 8 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனையடுத்து,மீண்டும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி … Read more

அவசர சட்டம் பிறப்பிப்பு : தமிழகத்தின் 20 -வது மாநகராட்சி தாம்பரம் ….!

தமிழகத்தின் 20  மாநகராட்சியாக தாம்பரத்தை அறிவித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் என அனைத்தையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அவசர சட்டம் மூலமாக தாம்பரம் தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக உருவாகியுள்ளது.

#BREAKING: புதிய காவல் ஆணையர்கள் நியமனம் – தமிழக அரசு

ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல்துறை ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவடி, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், மாநகர காவல் ஆணையராக சிறப்பு அதிகாரிகள் … Read more

பரபரப்பு – தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை!

தாம்பரம் ரயில் நிலையத்தின் கிழக்கு தாம்பரம் நுழைவு வாயில் அருகே மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை. தனியார் கல்லூரியில் படித்து வரும் 22 வயதான ஸ்வேதா என்பவர் அவரின் ஆன் நண்பர் ராமச்சந்திரன் என்பவருடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு, அவரும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இருவரும் அங்கு ரத்த … Read more

#Breaking:தாம்பரம் மாநகராட்சியாக அறிவிப்பு – தமிழகஅரசு..!

தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தாம்பரம்,பல்லாவரம்,செம்பாக்கம்,பம்மல்,அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 16 வது மாநகராட்சியாக உருவாகிறது தாம்பரம் மாநகராட்சி. அதேபோல, காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.    

தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் திடீர் தீ விபத்து!

சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அருகில் இருந்த ரயில்வே பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணங்கள் … Read more

பொதுமக்களுக்கு நற்செய்தி..! தீபாவளியை முன்னிட்டு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு..!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல  இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். இதற்காக பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து அதிக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறுகையில் , “கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் இருந்து   நாகர்கோவில் வழியாக கொச்சுவேலி வரை முன்பதிவு இல்லா ரயிலை … Read more

சென்னை சாலையில் கொட்டி கிடக்கும் பருப்பு மூட்டைகள்

சென்னை எண்ணூரில் இருந்து குடிமைப் பொருள் ஏற்றிச் சென்றுக் கொண்டு, சேலத்திற்கு லாரி புறப்பட்டது. தாம்பரம் அடுத்த இரும்புலியூர் வழியாக சென்றது. அப்போது மேம்பால வளைவில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அதில் லாரியில் இருந்த 20 டன் துவரம் பருப்பு மூட்டைகள் சாலையில் கொட்டின.அதிக வாகனங்கள் செல்லும் சாலை என்பதால் கொட்டிய பருப்பை எடுக்க முடியவில்லை இதனால் வாகனங்கள்  அதன் மேலேயே  சென்றதால், மூட்டைகள் அனைத்தும் வீணானது. … Read more