விரைவில் கெட்டிமேளம்…திருமண தேதியை அறிவிக்க காத்திருக்கும் மில்கி பியூட்டி தமன்னா!

Tamannaah Bhatia Wedding

பாலிவுட்டில் புதிய காதல் ஜோடிகளான தமன்னா – விஜய் வர்மா ஆகியோர் திருமணத்திற்கு தயாராகி வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமன்னா தற்போது விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சூசகமாக பதில் கூறிஉள்ளார். ஆம், சமீபத்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய தமன்னா, “எனக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே காதல் வந்துவிட்டது” என மனம் திறந்து பேசினார். இதன் … Read more

மார்க்கெட் இல்ல ஆனா கோடிகளில் புரளும் நடிகை தமன்னா! எப்படி தெரியுமா?

TamannaahBhatia

நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவரை பிரபலப்படுத்தியதோ இல்லையோ அவர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’  பாடலில் நடனம் ஆடியது அவரை எங்கயோ கொண்டு சென்றது என்றே சொல்லலாம். இந்த பாடல் வெளியான சமயத்தில் இருந்து தமன்னா தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆனாலும், அவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவே இல்லை. தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தமன்னா ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும், … Read more

அந்த விஷயத்தை கார்த்தி தான் எனக்கு கற்று கொடுத்தார்! மனம் திறந்த தமன்னா!

tamanna about karthi

நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா இருவரும் ஜோடியாக நடித்த படங்களுக்கு எல்லாம் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இவர்களுடைய நடிப்பில் வெளியான பையா, தோழா, சிறுத்தை உள்ளிட்ட படங்களில் இவர்களுடைய காதல் காட்சிகள் பலருடைய பேவரைட் ஆக இருக்கிறது. அந்த அளவிற்கு திரையில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருக்கும். இந்நிலையில், சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களும் கூட. எனவே, சினிமாவை பற்றி இருவருமே மாறி மாறி பேசிக்கொள்வது உண்டு. அந்த … Read more

சூர்யா படத்திற்குள் தமன்னா காதலன் வந்தது எப்படி? உண்மை காரணம் இதுதானா?

suriya Tamannaah

சூர்யாவின் 43-வது திரைப்படத்தை இறுதிசுற்று, சூரரைப்போற்று உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 2 டி நிறுவனம் தான் தயாரிக்கிறது.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு இது தான் 100-வது படம். இந்த 43-வது திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா, நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்த நிலையில், … Read more

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகை தமன்னா.!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்மையில், தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் தமன்னாவிற்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமன்னா, நேற்று கொரோனாவிலிருந்து வர் மும்பையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டேன். … Read more