லஞ்சம் கேட்ட காவலர் சஸ்பெண்ட்..!

சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணி சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணதாஸிடம் லஞ்சம் கேட்டதால் நேற்று ஆயுதப்படைக்கு காவலர் குணசேகரன் மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு காவலர் குணசேகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

வாக்குப்பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஆசிரியை சஸ்பெண்ட்.!

தபால் வாக்கை பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சரகம் சுரண்டையில் ஆர்சி நடுநிலை பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவர் தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்து, அதனை பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியை பணிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#BREAKING: தேர்தல் பணியில் அலட்சியம் – 3 பேரை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்.!

கோவை வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. கோவையில் வால்பாறை தொகுதியில் தேர்தல் செலவினம் குறித்து அறிக்கையை சரிபார்க்காமல் இருந்த புகாரில் வட்டார வளர்ச்சி அதிகாரி, 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணகேடியா சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை சார்பார்க்காமல் … Read more

#BREAKING: சுற்றுசூழல் அதிகாரி பாண்டியன் சஸ்பெண்ட்.!

ஊழல் புகாருக்கு உள்ளான சுற்றுசூழல் அதிகாரி பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுசூழல் கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து சுற்றுசூழல்துறை உத்தரவிட்டுள்ளது. ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில், பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளது சுற்றுசூழல்துறை. லஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் நகை, பணம் சேர்த்தது அம்பலமானதால் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும்  … Read more

மதுவிலக்கை அமல்படுத்த தவறிய அதிகாரிகள்.. இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்த டிஜிபி!

பீகாரில் மதுவிலக்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை அமல்படுத்த தவறிய அதிகாரிகள் 3 பேரை டிஜிபி ஏ.கே.சிங்கல் இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, அது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மதுவிலக்கு உத்தரவை அமல்படுத்த தவறிய மூன்று எஸ்.எச்.ஓக்களை பீகார் மாநில டிஜிபி இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதிகாரிகளின் இந்த செயலுக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கவலை தெரிவித்தார். இதற்கு … Read more

மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி – வைரலாகிய வீடியோவால் பணி இடைநீக்கம்!

மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி,வைரலாகிய வீடியோவால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் ஐபிஎஸ் உயர் அதிகாரியாக பணியாற்றிய வரக்கூடிய புருஷோத்தம் சர்மா எனும் சிறப்பு இயக்குனர் தனது மனைவியை கொடூரமாக அடித்துள்ளார். கழுத்தை நெரித்து தரையில் வைத்து அவரது தலையில் அவர் ஓங்கி அடித்துள்ளார். இவ்வாறு அவரது மனைவியை அடித்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகியதால் இது மூத்த அதிகாரிகளின் கண்களில் பட்டு, … Read more

சந்தனமர கடத்தல் தொடர்பான தகவல் கசிவு – 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட்!

சந்தனமர கடத்தல் தொடர்பான தகவலை குற்றவாளிகளுக்கு கொடுத்ததால் 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சந்தன போதை மருந்து தொடர்பான தகவல்களை குற்றவாளிகளுக்கு பகிர்ந்து கொண்டதாக பெங்களூரை சேர்ந்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் பணத்தை வாங்கிக்கொண்டு கடத்தல்காரர்களிடம் இரண்டு காவலர்கள் சந்தன மரம் தொடர்பான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் அவர்கள் கூறுகையில், இரண்டு காவல் துறையினரும் சந்தன கடத்தல் தொடர்பான … Read more

கொரோனா மருத்துவமனையிலிருந்து 2 கைதிகள் தப்பி ஓட்டம் ..3 போலீசார் இடைநீக்கம்.!

கொரோனா மருத்துவமனையிலிருந்து 2 கைதிகள் தப்பிச் சென்றதை அடுத்து 3 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் கொரோனா மருத்துவமனையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற மூன்று கான்ஸ்டபிள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்தனர். பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அண்டர் ட்ரையல்ஸ் ராஜ்ஜு யாதவ் மற்றும் பிரிஜ்லால் ஆகியோர் செப்டம்பர் 7 ஆம் தேதி கோ கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை, கைதிகள் மருத்துவமனையின் கழிப்பறையின் … Read more

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: மூன்று அதிகாரிகள் உட்பட 19 பேர் சஸ்பெண்ட்.!

கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 3 வேளாண் உதவி இயக்குநர்கள் உட்பட 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த ரூ.6000 நான்கு மாதத்திற்கு ரூ.2000 என வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து … Read more

28 வயது பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு காவல் அதிகாரி இடைநீக்கம்.!

உத்தரபிரதேசத்தில் 28 வயது பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் ஒரு காவல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் 28 வயதான ஒரு பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து  முன்னதாக கலான் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட பண்டா எஸ்.எச்.ஓ சுனில் சர்மா இந்த விவகாரத்தில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட பிரதான முகமாக இருந்தார் இது காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து ஷாஜகான்பூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஆனந்த் கூறுகையில், அந்த … Read more