#BREAKING: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்!

பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து … Read more

குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்; அவர்களை தண்டிக்க வேண்டாம் – செல்வமேரி அம்மா!

பேருந்திலிருந்து என்னை இறக்கி விட்டவர்களை தண்டிக்க வேண்டாம், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட செல்வமேரி அம்மா கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். … Read more

பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் …!

பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…!

சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போல கடந்த 1979 – 1985 வரை அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காள தேசத்துக்கு மக்கள் வெளியேறுமாறு போராட்டம் … Read more

வன்கொடுமை செய்த குற்றவாளி தப்பியோட்டம்.., 3 காவலர்கள் இடைநீக்கம்..!

சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி தப்பிக்க அலட்சியம் காரணமாக மூன்று போலீசார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புனேவில் செப்டம்பர் 17 ஆம் தேதி நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 28 வயது நபரை வர்ஜே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அடுத்த நாளே அந்த குற்றவாளி போலீஸ் காவலில் இருந்து தப்பினார். பின்னர் குற்றவாளியை நகரத்தில் உள்ள மதுபானக் கூடத்தில் இருந்து போலீசார் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை குற்றவாளி தப்பிக்க … Read more

மாணவிகளை நிர்வாணமாக பள்ளிக்கு வர சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்..!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தலைமை ஆசிரியர் எதிராக புகார் அளித்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் ராஜ்கரில் உள்ள ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி சீருடை அணியாததற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த சனிக்கிழமை திட்டி உள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவிகளை நிர்வாணமாக பள்ளிக்கு வர சொன்னதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பள்ளி சீருடை … Read more

#BREAKING: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட்!!

மம்தாவின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, நேற்று மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி,, உளவு பார்க்கும் விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வந்தார். அப்போது, அந்த அறிக்கையின் நகலை அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி, அதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி சாந்தனு சென் கிழித்தாக கூறப்படுகிறது. அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி கிழித்த நகலை அவையின் துணை … Read more

ஊரடங்கை மீறியதற்காக மனநலம் பாதித்தவரை அடித்து கொன்ற காவலர்கள் 8 பேர் சஸ்பெண்ட்!

கர்நாடகத்தில் ராய் டிசோசா என்னும் 50 வயது மனநல பாதிக்கப்பட்ட முதியவர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 8 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் வசித்து வரக்கூடியவர் தான் மனநலம் குன்றிய 50 வயது முதியவர் ராய் டிசோசா. இவர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சென்றதற்காக காவலர்களால் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் உயிரிழந்த டிசோசாவின் சகோதரர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். … Read more

மதுரையில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரம் – திமுக பிரமுகர் பிரகாசம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுக துணை மாணவரணி செயலாளர். பேக்கரி விவகாரம் தொடர்பாக போரூர் திமுக செயலாளராக இருந்த பிரகாசம் கட்சியிலிருந்து நீக்கம். மதுரை வாடிப்பட்டியில் உள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கையில் ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்து திமுக மாணவரணி துணை செயலாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேக்கரியில் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் பேக்கரியில் … Read more

தள்ளு வண்டியில் இருந்து முட்டை திருடிய தலைமை காவலர் சஸ்பெண்ட் – வைரல் வீடியோ உள்ளே!

சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த முட்டை திருடிய பஞ்சாபை சேர்ந்த தலைமை காவலர் தற்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மக்களின் உயிர்காக்கும் காவல் துறை அதிகாரிகள் பல இடங்களில் பாராட்டுக்குரியவர்களாக இருந்தாலும் சில இடங்களில் மக்களுக்குப் பிடிக்காத சில விஷயங்களிலும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்றாக கடை வைத்திருப்பவர்களிடம் தகராறு செய்து பொருட்களை இலவசமாக பெற நினைப்பது உள்ளிட்ட சில தவறான செயல்களில் சில காவலர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் பஞ்சாபிலுள்ள சண்டிகர் ஃபதேகர் சாஹிப் அருகே … Read more