தெலுங்கானாவில் ஒரே நாளில் 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்… காரணம் என்ன?

Telangana

Telangana: தேர்தல் விதி மீறல் காரணமாக 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த சூழல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

பல மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரிஜ் பூஷன் சிங்  மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான சஞ்சய் குமார் தேர்தலில் நின்றார். சமீபத்தில மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் முடிவு வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி … Read more

கள்ளச்சாராயம் விவகாரம்! 70க்கும் மேற்பட்டோர் பலி.. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பலியாகியதை அடுத்து 5 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆளும் அரசை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து குற்றச்சாட்டி வருகிறது. பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்திருந்தார். குடித்தால் இறந்து விடுவீர்கள் என எச்சரித்தும், தொடர்ந்து அப்படி … Read more

அரசு கலைக் கல்லூரி முதல்வர், அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட்!

கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணிபுரிந்து வந்த அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட். ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் முறையாக அனுமதி பெறாமல் மரங்களை வெட்டி குறைந்த விலைக்கு விற்ற புகாரில் கல்லூரி முதல்வர் எஸ்.பங்காரு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, அரியலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 8ம் வகுப்பு படித்ததாக போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளாக வேலை பார்த்த அலுவலக உதவியாளர் ஜெயராமன் (57) … Read more

பணிக்கு வராத 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்!

அரசு பொது மருத்துவமனையில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவு. மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந் 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் பணிக்கு வராதது தெரிந்ததை அடுத்து 4 அரசு மருத்துவர்களையும் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட … Read more

#BREAKING: பால்வளத்துறை துணை ஆணையர் பணி இடைநீக்கம்!

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை சஸ்பெண்ட் செய்து ஆணையர் பிரகாஷ் உத்தரவு. மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில், பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கிறிஸ்துதாஸ் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடையும் வரை ஒய்வு பெற அனுமதி இல்லை என்றும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.

#BREAKING: நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் – பொறியாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்!

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் பணியிடை நீக்கம். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நெஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சாலை போடாமல் போடப்பட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக … Read more

பெண் கைதி தப்பியோட்டம்- 2 காவலர்கள் சஸ்பெண்ட்

திருவாரூர் பேரளம் பகுதியை சேர்ந்த பெண் கைதி கஸ்தூரி தப்பி ஓடிய விவகாரத்தில் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் கோமதி, சத்யாவை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தப்பியோடிய பெண் கைதி கஸ்தூரியை மீண்டும் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பப்ஜி மதனுக்கு சொகுசு வசதி? – லஞ்சம் கேட்ட ஜெயிலர் பணியிடை நீக்கம்!

பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவு. யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் புழல் சிறையில் … Read more

அழுகிய முட்டை – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

கரூரில் சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து 3 பேர் சஸ்பெண்ட் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் மதிய உணவு மற்றும் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் நாகனுரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி அதில் புழுக்கள் இருந்தததும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதையும் அடுத்து புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து சத்துணவு … Read more