விஜய் தேவரகொண்டாவுடன் இணைய உள்ளாரா சூர்யா?!!

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது படங்கள் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும். இவரது நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடந்து சூர்யா அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி மூலம் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார், என செய்திகள் … Read more

மீண்டும் சூர்யாவுடன் மாஸாக இணையவுள்ளேன்! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். அன்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சூர்யா படம் பற்றி கேட்கபட்டது. அப்போது , தானா சேர்ந்த கூட்டம் படம் சூர்யாவை கேஷூவலாக காட்ட கதை அப்படி எடுக்கப்பட்டது. மீண்டும் அவருடன் இணையும் படம் வேற லெவலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். DINASUVADU

சூர்யாவின் அடுத்த அதிரடி! உறியடி 2!!!

2016ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் விஜய் குமார் என்றவர் இயக்கி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகன்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உறியடி. இப்படம் இன்றைய மாணவர்களின் கல்லூரி வாழ்கை, சாதி வெறி, அரசியல் என பல விஷயங்களை தோலுறித்து தைரியமாக காட்சிபடுத்தபட்டிருந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இதனை நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU

சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய மாஸ் ஹிட் சூர்யா மூவி!!!

நடிகர் சூர்யா – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேல். இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதையை ஹரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் எழுதினாராம். அவரிடம் சொல்வதிற்குள் இயக்குனர் ஹரி, சூர்யாவுக்கு சொல்லிவிட்டாராம். கதையை கேட்ட சூர்யா அட்வான்ஸ் கூட வாங்காமல் எப்போது சூட்டிங் போலாம் என கேட்டு விறுவிறுவென படத்தை முடித்துவிட்டாராம். இதனை அறிந்த ரஜினிகாந்த் ஏன் என்னிடம் இந்த கதையை முதலில் … Read more

கொரில்லாவின் டீசரை வெளியிடும் சூர்யா

நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள திரைப்படம் கொரில்லா. இப்படத்தில் நடிகய்களுக்கு இணையாக ஒரு சிம்பன்ஸி வகை குரங்கும் நடித்து வருவது குறிப்பிடதக்கது. இப்படத்தில் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சதீஸூம் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். DINASUVADU

நோட்டாவை புகழ்ந்து தள்ளிய சூர்யா

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் நோட்டா(NOTA)  இப்படம் தமிழ் மற்றும் தெழுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது அதில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் ட்ரெய்லர் காட்சிகளும் இப்படம் பக்கா அரசியல் கமர்சியல் படமென காட்டுகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

வைரலாகும் சூர்யா மகளின் வீடியோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இதில் மகள் தியா பள்ளி படிப்பை பயின்று வருகிறார். இவர் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் நன்கு விளையாடி வருவார். அதிலும் கிரிகெட் விளையாட்டில் மாநில அளவில் விளையாண்டு இந்திய கிரிகெட் வீராங்கனை மிதாலி ராஜ் கையில் பரிசும் வாங்கியுள்ளார். இவர் அண்மையில் கிரிகெட் பயிற்ச்சி எடுத்த … Read more

செக்கசிவந்த வானம் திரைபடத்தில் சூர்யாவா?! வெளியான புகைபடத்தால் படக்குழு அதிர்ச்சி!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சென்றவாரம் ரிலீஸாகி 5மில்லியன் பார்வைய்ளர்களை கடந்து நல்லல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திலையில் தற்போது இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சூர்யா இடம்பெற்றிருந்தார். அதனை பார்த்தவுடன் ரசிகர்கள் சூர்யா அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என கிளப்பிவிட்டனர். அவர் உண்மையிலேயே படத்தில் நடிக்கிறாரா? அல்லது அவரது … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியையே தூக்கி சாப்பிட்ட கடைக்குட்டி சிங்கம்

இந்த வருடம் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துவிட்டன. இதில் வெற்றி பெற்ற  படங்களை எண்ணிப்பார்த்து சொல்லிவிடலாம். தற்போது உள்ள திருட்டு ப்ரைவசி பிரச்சனையில் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதே குறைந்து வருகிறது. அப்படி இருக்க இந்த வருடம் தியேட்டருக்கு அதிகமானோர் வந்து பார்த்து ரசித்த திரைப்படம் எது என்று கேட்டால் சென்ற வாரம் வரையில் சூப்பர் ஸ்டார் நடித்த காலா தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனையை கடைக்குட்டி சிங்கம் முறியடித்துள்ளது. கார்த்தி நடித்த … Read more

3 ட்ரக்குகள் மூலம் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் அன்பான சூர்யா ரசிகர்கள்

கேரளாவில் பெய்த கனமழையால், கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரையில் 300 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பலரும் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிருவனகளும், பல பிரபலங்களும் தங்களால் முடிந்த  உதவிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் 3 ட்ரக்குகள் மூலமாக அனுப்பி வைக்கபடுகிறது. ஏற்கனவே 1 ட்ரக் மூலமாக பொருட்கள் அனுப்பி … Read more