கொடூர லுக்கில் பாபி தியோல்! கங்குவா படத்தின் புதிய போஸ்டர்!

Kanguva

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். பிரபல நடிகரான பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரெடின் கிங்ஸ்லி, பி.எஸ். அவினாஷ், கோவை சரளா, யோகி பாபு, ஆராஷ் ஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் தேவி … Read more

ஆஹா! 500 கோடி பட்ஜெட்டில் சூர்யாவின் புதுப்படம்?

suriya

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு பிரமாண்டமாக 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவும் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள தனது … Read more

சூர்யா படத்தில் இருந்து விலகிய நஸ்ரியா? அதிதி ஷங்கருக்கு அசத்தல் வாய்ப்பு!

Nazriya Nazim suriya aditi shankar

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில்  தன்னுடைய 43 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படவும் உள்ளது.  இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். படத்திற்கான அறிவிப்பும் … Read more

அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது! கேப்டன் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா!

Suriya cry

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடைய உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவக்குமார், கார்த்தி இருவரும் நேற்று தனது அஞ்சலியை செலுத்தினார்கள்.  ஏற்கனவே, தான் வெளிநாட்டில் இருப்பதால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என வீடியோ … Read more

நடிகர் சூர்யாவின் கையில் புதிய டாட்டூ…இணையத்தை கலக்கும் புகைப்படம்!

suriya

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா.  இப்படத்தில் கோவை சரளா, ஜிஷு சென்குப்தா, யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள் மற்றும் அசல் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இதற்கிடையில், 10 ஒவர்கள் கொண்ட இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) தொடர், வரும் மார்ச் 2 முதல் 9ஆம் தேதி … Read more

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா!

actor suriya

ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது. ISPLT10 கிரிக்கெட் என்றால் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆகும். 10 ஓவர்கள் வைத்து நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ISPLT10 கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் … Read more

ஆதரவளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! அமீர் அறிக்கை!

Suriya and Ameer

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து ‘மௌனம் பேசியதே’ படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் இதே தினத்தில் (டிசம்பர் 13)-ஆம் தேதி தான் 2002-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நந்தா துரைராஜ், அஞ்சு மகேந்திரன், நேஹா பென்ட்சே, விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி இன்றுடன் … Read more

தேடி வந்த ஆங்கில பட வாய்ப்பு! வெற்றிமாறன் பதிலுக்கு காத்திருக்கும் சூர்யா?

Suriya vetrimaaran

நடிகர் சூர்யா தற்போது படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக தன்னுடைய 43-வது திரைப்படமான சுதாகொங்கரா இயக்கும் “சூர்யா 43” படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கான படப்பிடிப்பும் … Read more

நடிகர் சூர்யாவை பார்த்து வியந்து போன பாலிவுட் பிரபலம்.!

suirya - kanguva - Bobby Deol

பாலிவுட் நடிகர் பாபி தியோல் தற்போது ‘அனிமல்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் மூழ்கியுள்ளார். ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அப்ரார் ஹக் என்ற முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இப்போது கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சூர்யா நடிக்கும் படத்தில் தனது பங்கு குறித்து மனம் திறந்து பேசினார்.  சமீபத்தில் ஒரு முன்னணி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த பாபி தியோல், தற்போது சூர்யாவுடன் கங்குவா என்ற படத்தில் நடித்து … Read more

சிவகுமார், சூர்யா மீது வழக்கு போட எனக்கு விருப்பமேயில்ல! இயக்குனர் அமீர் பேச்சு!

ameer about sivakumar and suriya

பருத்திவீரன் பட சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த பிரச்சனை முடிந்த பாடு இல்லை. தன்னிடம் இருந்து பருத்திவீரன் படத்தை மிரட்டி வாங்கிவிட்டதாகவும், தனக்கு ஞானவேல் தயாரிப்பிலிருந்த்து பணத்தை பெற்று தரும்படியும் அமீர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார். அந்த வழக்கும் இன்னும் நிலுவையில் தான் இருந்து வருகிறது. இதனையடுத்து, ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more