ஆர்.எஸ்.பாரதி ஜாமீன்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..?

ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம்  23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது  செய்தனர்.  இந்த வழக்கை … Read more

BREAKING: 50% இட ஒதுக்கீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு.!

மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீட்டை ஒபிசி பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் தரும் இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 % வழங்க கோரி அதிமுக மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஏற்கனவே திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வருகின்ற 14-ஆம் தேதி … Read more

பொருளாதார அம்சங்களை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம்.!

வங்கி கடன்களின் வட்டியை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பலர் வங்கிகளில் கடன் வாங்கி வட்டியை கட்ட முடியாமல் அவதி படுகின்றனர். அதனையடுத்து தற்போதுள்ள சூழலை மனதில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டியை வழங்க 6 மாதக் காலம் அவகாசத்தை வழங்கியிருந்தது. இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் 6 மாத … Read more

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டணம்.. மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்து வரும் நிலையில், அதற்க்கு கட்டணத்தை நிர்ணயிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் 2,26,770 பேர் பாதிக்கப்பட்டு, 6,348 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அதற்க்கு கட்டணத்தை நிர்ணயிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு … Read more

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம்; உச்சநீதிமன்றத்தில் மனு.!

8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க திட்ட மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். … Read more

இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.!

அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தப்படவில்லை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% ஒதுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தப்படவில்லை என்று மனுவில் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், … Read more

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு!

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பிற மாநிலங்களில், அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  மேலும், 2020-ம் ஆண்டு நீட் … Read more

கட்டணத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அவர்களுக்கான உணவுகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், பலர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1 ஆம் தேதி முதல் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு … Read more

மதுபிரியர்களுக்கு இன்ப செய்தி.! இன்று முதல் டாஸ்மாக் ஓபன்.!

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக்  நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி கொடுத்தது. ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி  மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் … Read more

#BREAKING: மது வாங்க இதுதேவையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி .!

ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும் என விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது என உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சமூக இடைவெளியுடன் மதுபானங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் … Read more