4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் – யுஜிசி

4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் என்று யுஜிசி அறிவிப்பு. இதுதொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்.டி படிப்பைத் தொடரலாம் என்றும் மூன்று ஆண்டு படித்தவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் வழங்குவதா அல்லது நான்கு ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பை வழங்குவதா என்பதை பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 4 ஆண்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் … Read more

48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து! 2 பேர் உயிரிழப்பு! பலர் காயம்..

சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நேற்றிரவு இரவு 48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 16 மற்றும் 17 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை … Read more

EMIS-ல் பதிவு செய்தால் தான் நலத்திட்ட உதவிகள்! – பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. EMIS-ல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களில் தவறு இருந்தால் டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் திருத்தவும் பள்ளிக்கல்வித்துறை … Read more

டெலிகிராம், வாட்ஸாப் மூலம் புதுப்புது போதை வஸ்துக்கள்… பெங்களூரு மாணவர்கள் அட்டகாசம்.!

போதைப்பொருட்களுக்கு எதிரான சோதனையின் போது பெங்களூருவில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பல்வேறு விதமான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இந்தியாவில் போதைப்பொருள் கலாச்சாரம் சற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதற்கு சாட்சியாக முன்பில்லாத அளவுக்கு பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருள்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர். இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பெரும்பாலும் படிக்கும் மாணவர்களும், படித்த இளைஞர்களும் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அப்படித்தான் … Read more

இவர்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல்

6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்.  உச்சநீதிமன்றத்தில், ஜெயாதாகூர் என்பவர் 6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் சானிட்டரி நாப்கின்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் மாதவிடாய் கால சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும் அந்த … Read more

பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை – நீதிமன்றம்

ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து. பிள்ளைகள் மீதான கடமை, பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் பேண செய்யும் ஆசிரியர்களை குறை சொல்ல கூடாது. ஆசிரியர்களை குறை சொன்னால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்யமாட்டார்கள். எனவே, மாணவர்கள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஆசிரியர்கள் மீது புகார் … Read more

பஸ்சில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு இவர்கள்தான் பொறுப்பு – போக்குவரத்து கழகம்

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு. பேருந்து படிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் – ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

அடுத்த கல்வியாண்டில் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உததரவு.  மலைப்பகுதிகளில் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக ராசு ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது. அடுத்த கல்வியாண்டில் ( 2023-2024 ) மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை…!

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.  அதன்படி, கனடா முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் உஷாராக இருக்குமாறும், தங்களது விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

ரயிலில் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை.. ரயில்வே காவல்துறை எச்சரிக்கை!

கத்தியுடன் ரயிலில் சென்று அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153-ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை. ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயில்களில் அட்டூழியம் செய்யும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சென்னை – திருத்தணி மின்சார ரயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு … Read more