போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து விடும் – ஆசிரியர் சங்கத்தினர்

போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளில் எப்படி மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்? என TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி.  TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறுநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை நீக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய … Read more

மின்கட்டண உயர்வு – அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் ..!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்.  தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன் அமலுக்கு வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், இதனை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற … Read more

லேப்டாப் போராட்டம் : மாணவர்கள் மடியில் அபரந்து போராட்டம்..!

கேரளாவில் மாணவ மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் சிஇடி என்ற பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அசோசியேசன் சார்பில் நிழல் கொடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொறியியல் கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் அமர்வது வழக்கம். மாணவ, மாணவிகள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதியினர் சிலர் அசோஸியேஷனில் புகார் அளித்தனர். இதனை எடுத்து அசோசியேசன் … Read more

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்!

போக்குவரத்து ஊழியர்  சங்கம்,வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  போக்குவரத்து ஊழியர்  சங்கம்,வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை  அறிவித்துள்ளனர். மேலும், இதற்கான நோட்டீசை மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

#Breaking:ரேசன் ஊழியர்கள் ஸ்டிரைக்;சம்பளம் பிடிக்கப்படும் – கூட்டுறவுத்துறை போட்ட உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி,”NO Work No Pay” என்பதன் அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதில் மாற்று ஏற்பாடு செய்து ரேசன் கடைகளை திறக்கவும் … Read more

தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்..!

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி,  குடியாத்தம், காவேரி பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்,  தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டு செல்லபடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் இந்த போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்தியரசு … Read more

#BREAKING: புதுச்சேரியில் திமுக எம்எல்ஏக்கள் 4 பேர் கைது!

புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்து போலீஸ் நடவடிக்கை. நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும், இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிஐடியூ, ஏஐடியூசி, யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை … Read more

அதிக கட்டணம் – காவல்துறை எச்சரிக்கை!

மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் சந்தித்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு … Read more

நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் தொடக்கம் – பயணிகள் அவதி!

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதனிடையே,வேலை நிறுத்தம் … Read more

பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்..!

கடந்த 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றம் அதிகளவில் விற்பனையாக கூடிய சரவெடி பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. … Read more