தூத்துக்குடி துப்பாக்கி சூடு – நாளை 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி…!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை … Read more

#Breaking:அனுமதி கேட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலையை மூட முன்னதாக தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து,தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில்,ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த … Read more

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையயை வேறெங்கும் மாற்றும் எண்ணம் இல்லை – வேதாந்தா தலைவர்!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கோரி மக்கள் நடத்திய பெரும் போராட்டத்தில் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்  வைக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை ரத்து செய்யகோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு தற்பொழுதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – 35 ஆம் கட்ட விசாரணை தொடக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 35ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 34-வது கட்ட விசாரணை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 9 பேருக்கு சம்மன்அனுப்பப்பட்டிருந்தது. … Read more

#BREAKING : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல்…!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல். கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த ஆணையம் ஒரு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. இந்த புலனாய்வு அமைப்பு விசாரணை செய்த அறிக்கையை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்தது. அந்த … Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கி வந்த தண்ணீர் நிறுத்தம்..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கி வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவை ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பின்னர், ஸ்டெர்லைட் ஆலை  மூன்று மாதம் அதாவது ஜூலை 31ம் தேதி வரை திறக்க  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிமன்றம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், … Read more

#BREAKING: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஆக்கிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்சிஜன் உற்பத்திக்காக கடந்த 3 மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. நாளையுடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் … Read more

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்…! தமிழக அரசின் முடிவிற்கு நன்றி…! – கனிமொழி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ் நாடு அரசின் முடிவிற்கு நன்றி. கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு  உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது. இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனையடுத்து, வேதாந்தா … Read more

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை – தமிழக அரசு வலியுறுத்தல் ..!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட ஆக்சிஜன் கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், வரும் நாளை (ஜூலை 31-ஆம் தேதியுடன்) ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது. இதனால்,வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் … Read more

#BREAKING : ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும்..! உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு..!

வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த காலகட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு தனியார் அமைப்புகள்  ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வந்தது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று … Read more