மூன்று நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் மின்சார வாகனங்களுக்கு புதிய ஜாக்பாட்

மூன்று நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட மின்சார வாகனங்களுக்கு ஏற்ற பேட்டரியை ஹார்வர்டு ஆதரவு ஸ்டார்ட்அப் உருவாக்கியுள்ளது மற்றும் இது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம்-உலோக தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பேட்டரி வாழ்நாளில் 10,000 சுழற்சிகளுக்கு மேல் சார்ஜ் செய்ய முடியும். தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் பேட்டரியை வணிகமயமாக்குவதற்கும் ஆடன் எனர்ஜி $5.15 மில்லியன் நிதியைப் பெற்றுள்ளது.

சூப்பர் அப்டேட்.. “ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி”!

தமிழ்நாட்டை சேர்ந்த / தமிழ் வம்சாவளியை சேர்ந்த பட்டியலினத்தவர்களால் இந்தியாவுக்குள் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதியுதவி பெற www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பங்குகள், பங்குதாரர்கள் என்று அனைவரும் SC/ST வகுப்பினராக இருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.