#BREAKING: இன்றைய போட்டியில் பாட் கம்மின்ஸ் நீக்கம்; கேப்டனாக ஸ்மித்..!

Pat Cummins,smith

இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் வழிநடத்துவார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பாட் கம்மின்ஸ் அடிலெய்டு உணவகத்திற்கு இரவு உணவிற்குச் சென்றபோது அங்கு உணவாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் பாட் கம்மின்ஸ் நெருங்கிய தொடர்பில் இருந்தததால் பாட் கம்மின்ஸ் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் பிசிஆர் சோதனையை மேற்கொள்ளப்பட்டதில் அதில் நெகடிவ் முடிவு வந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் வழிநடத்துவார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால், ஸ்மித் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2018 டெஸ்டுக்குப் பிறகு ஸ்மித் முதல் முறையாக ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.

டிராவிஸ் ஹெட் துணைக் கேப்டனாக இருப்பார். மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நெசர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சிறந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடவில்லை.

#IPL2021: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. ஐபிஎல் தொடரில் இருந்து டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் விலகல்?

ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஹைதராபாத் அணியின் “யாக்கர் மன்னன்” நடராஜனும் வெளியேறினார்கள். மேலும், கொரோனா அச்சம் காரணமாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகவும், ஸ்டீவ் ஸ்மித் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா வீரர்களான சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகிய 3 பேர் வெளியேறிய நிலையில், தற்பொழுது டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் வெளியேறவுள்ளது, ரசிகர்களிடையே வருத்தமளிக்கிறது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் பித்தலாட்டம் வெளியானது.. ஷாக் வீடியோ..!

 மூன்றாவது டெஸ்ட் போட்டிஸ் ஸ்மித் செய்த காரியம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இந்திய, ஆஸ்திரேலிய இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  இந்நிலையில், பொதுவாக பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஸ்டம்புகளை மறைக்கும் வகையில் தங்களுக்கு ஏற்ப ஸ்டம்பிற்கு முன் தங்களது கால்களை  வைத்து கோடு போட்டு விளையாடுவார்கள். இதை கார்ட் என்று கூறப்படுகிறது. இந்த கார்ட் மூலம்  எல்பிடபிள்யூ, போல்டை தவிர்க்க உதவுகிறது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் பண்ட் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதைப் பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் அவரை திசை திருப்ப பிரேக் நேரத்தில், ரகசியமாக ஆடுகளத்தில் வந்து பண்ட் போட்டு வைத்து இருந்த கார்டை நீக்கி விட்டு, ஸ்மித் தனது காலால் பக்கத்தில் இன்னொரு கோட்டை போட்டு வைத்தார். பண்ட்  குழப்ப  அடையவேண்டும் வேண்டும் என்பதற்காக ஸ்மித் இதை செய்துள்ளார்.


இருப்பினும், பந்த் பின்னர் பேட்டிங் செய்ய வந்தபோது, ​​அம்பயரிடம் மீண்டும் அடையாளத்தை மாற்றி அமைக்க சொன்னார்,  ஸ்மித்தின் இந்த மோசமான செயலைப் பார்த்த பிறகு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் வீரரின் முகம் தெளிவாகக் தெரியவில்லை, ஆனால் அவரது ஜெர்சி எண் 49 தெரியவந்தது.  ஸ்மித் அணிந்துள்ளது ஜெர்சி எண் 49 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் புஜாரா, பண்ட் இருவரும் கூட்டணி அமைத்து 148 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரிஷாப் பந்த் 118 பந்தில் 97 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷாப் பந்த் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார் அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். புஜாரா 205 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.

யாருக்கு வெற்றி? நீயா? நானாவில் இன்று வார்னர்vsஸ்மித்.!

ஐபிஎல்2020 38வது லீக் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தி வெறித்தனத்தோடு எதிரணிகளை திணறடித்து வருகிறது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன.

9 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் 6 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானை விட அதிக ரன்ரேட் வைத்து முன்னிலை வகிக்கிறது. அதே போல், ராஜஸ்தான் அணியும் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் அடுத்து வருகின்ற போட்டிகளில் அதிக ரன்ரேட்டை தன் வசப்படுத்தினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

மேலும், இன்று நடைபெறும் ஆட்டம் அந்த ரன்ரேட்டை திர்மானிக்கும் ஆட்டங்களில் ஒன்றாக இருப்பதால் போட்டியில் பரப்பரப்பிற்கு பஞ்சமிருக்காது.

ட்விட்டர் பதிவால் எழுந்த சர்ச்சை.. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மாற்றம்??

ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பதிவால் ஸ்டீவ் ஸ்மித், தனது கேப்டன் பதவியை பட்டலருக்கு கொடுக்கப்போறாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டன் பதிவிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். அவர் விலகியதால், புதிய கேப்டனாக இயோன் மோர்கன் நிர்ணயிக்கப்பட்டார். இந்தநிலையில், ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஜோஸ் பட்டலரின் புகைப்படத்தை பகிர்ந்து, “ஜோஸ் பட்லர் போல ஒரு பாஸ் இருப்பதற்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தது, ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும் ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன் பதிவில் இருந்து விலகுவதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் இந்த ட்வீட், பெருமளவில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், தினேஷ் கார்த்திக் தனது பதவியை ராஜினாமா செய்த நேரத்தில் இந்த பதிவு இருந்த காரணம், சந்தேகத்தை ஏற்படுத்தி, பெருமளவில் வதந்திகள் பரவியது.

அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் 8 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான், 3 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும், ஸ்டீவ் ஸ்மித் பேட்ஸ்மேனாகவும் சிறந்து விளங்கவில்லை என்ற காரணத்தினால் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாகவும் செய்திகள் பரவத் தொடங்கியது. இந்த செய்திகள் அனைத்தும் பொய் எனவும், இது பொய் எனவும் தெரிவித்தனர்.

அதனை நிரூபிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டது. அதில் ஸ்டீவ் ஸ்மித் புகைப்படத்தை பதிவிட்டு, “கேப்டன்” என குறிப்பிட்டு, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எனக்கு விராட் கோலி ஸ்மித் போல் பேட்டிங் செய்ய ஆசை.!

ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கிஉள்ளனர் மேலும் இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி நட்சத்திர கிரிக்கெட் வீரர் மார்னஸ் லாபுசாக்னே, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கடந்த ஆண்டு விளையாடிய கிரிக்கெட் பற்றி கூறியுள்ளார், கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடியது மிகவும் சிறப்பாக இருந்தது, சென்ற ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டு.

மேலும் இனி வரும் காலங்களில் அணைத்து அணிகளும் வலிமையாக களமிறங்கும், அதிலும் சில கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் அதற்கு எடுத்துக்காட்டு ஸ்மித், கோலி, வார்னர், ஆகியோர் கடந்த 10 ஆண்டுளாளாக நன்றாக விளையாடிவருகிறார் கள். மேலும் ஸ்மித் பேட்டிங் செய்யும் பொழுது அவரிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ளலாம். மேலும் எனக்கு ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் கூறியுள்ளார்.

i

தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளை இழந்த ஸ்மித் .! முதலிடத்தை தொடரும் கிங் கோலி .!

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது.
  • ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளை இழந்து மீண்டும்  2-வது இடத்தில் உள்ளார். சுமித்தை விட கோலி 17 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

இரண்டாவது போட்டி வருகின்ற 26 -ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்  தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 928 புள்ளிகள் எடுத்த நிலையில் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு  எதிராக விளையாடிய  முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 43 , இரண்டாவது இன்னிங்சில் 16 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகள்  பெற்று 12 புள்ளிகளை இழந்து மீண்டும்  2-வது இடத்தில் உள்ளார். சுமித்தை விட கோலி 17 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன 3-வது இடத்திலும் , புஜாரா 4-வது இடத்திலும், ரஹானே  6-வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 143 ,இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் 786 புள்ளிகள் பெற்று  3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

 

7 முறை விக்கெட்டை பறித்த யாசிர் ஷாவுக்கு சவால் விட்ட சுமித்..!

பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.கடந்த 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், அப்போது பிரிஸ்பேனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் பந்து வீச்சில் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தேன்.
நான் எனது விக்கெட்டை இழந்ததும் யாசிர் ஷா அவர் 7 விரல்களை உயர்த்தி காட்டினார். முதலில் அது எனக்கு என்னவென்று தெரியவில்லை. பிறகு தான் தெரிந்தது அவரது பந்து வீச்சில் இதுவரை நான் 7 முறை விக்கெட்டை இழந்து உள்ளேன் என்பது தெரியவந்தது.
உண்மையிலே அவரது பந்து வீச்சில் நான் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் விக்கெட்டை இழந்து இருப்பேன் என நினைத்தேன். அவரது சைகை இப்போது எனக்குள் உத்வேகம் அதிகரித்து உள்ளது.
அடுத்த போட்டி  நாளை மறுநாள் அடிலெய்டில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எனது விக்கெட்டை  நிச்சயம் எளிதாக இழக்க மாட்டேன் என கூறினார்.

100 பந்து கொண்ட தொடரில் ஸ்மித் , வார்னர் விலை ரூ .1,14,80,576…!

அடுத்தாண்டு முதல் முதல் முறையாக 100 பந்து கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முன்பு 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் 20 ஓவர் போட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் டி20 போட்டி விட குறைவான பந்துகள் கொண்ட 100 பால் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தொடரில் விளையாட அணி வீரர்களை தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. பிரபல கிரிக்கெட் வீரர்களான ஸ்மித் , வார்னர் ஆகிய இருவருக்கும் 125,000 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த தொடரில் கிறிஸ் கெயில் , மலிங்கா , ரபாடா ஆகியோருக்கும்  இதே விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஷாகிப் அல் ஹசன் , வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் ஆகியோருக்கு ஒரு லட்சம் பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டிகளுக்கான ஏலம்  வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகள் கழித்து டி 20 அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர்…!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் செய்து இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மூன்று டி20 தொடரில் விளையாட உள்ளன. ஆஸ்திரேலிய அணியுடன் , இலங்கை இந்த மாதம் 27, 30 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் விளையாட உள்ளனர்.
இதை தொடர்ந்து  நவம்பர் 3 , 5 மற்றும் 8-ம் தேதிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளனர்.இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் உலகக் கோப்பையில்  மோசமான ஆட்டத்தை  வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் கேப்டன் ஸ்மித்தை சேர்க்கப்பட்டு உள்ளார்.
ஸ்மித் கடைசியாக 2016-ம் ஆண்டு  மார்ச் மாதம் மொஹாலியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பின் ஸ்மித் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆஸ்திரேலிய டி20 போட்டியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன் ) ,ஆஷ்டன் அகர் ,அலெக்ஸ் கேரி ,பாட் கம்மின்ஸ் ,க்ளென் மேக்ஸ்வெல்,பென் மெக்டெர்மொட் ,கேன் ரிச்சர்ட்சன் ,ஸ்டீவ் ஸ்மித் ,பில்லி ஸ்டான்லேக் ,மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர் ,ஆண்ட்ரூ டை ,டேவிட் வார்னர் ,ஆடம் சம்பா

Exit mobile version