Ranji Trophy : அரை இறுதியில் படு தோல்வி அடைந்த தமிழ்நாடு ..! இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மும்பை ..!

RAnji Trophy [file image] (1)

Ranji Trophy : இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மதிப்பு மிக்க போட்டியாக பார்க்கபடுவது ரஞ்சி கோப்பையாகும். இது 89-வது ரஞ்சி கோப்பையாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ரன்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதி வரை தமிழ்நாடு அணி வந்தது. அரை இறுதியில் போட்டியில்,  41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற வலுவான மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் … Read more

பிரசித், ஷர்துல்க்கு பதில் அவரை தேர்வு பண்ணிருக்கலாம் – சல்மான் பட்!

salman butt

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கிடையில், இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்தும் அடுத்த போட்டியில் எடுக்கப்படவேண்டிய வீரர்கள் பற்றியும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்  கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் ” பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாகூர்க்கு … Read more

பயிற்சியின் போது ஷர்துல் தாக்கூருக்கு ஏற்பட்ட காயம்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பயிற்சியின் போது ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தின் தீவிரம் இன்னும் தெரியவில்லை, மேலும் அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படலாம். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷர்துல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டி, … Read more

அன்று 199, இன்று 185.. டீன் எல்கர் கனவை கலைத்த ஷர்துல் தாக்கூர்

டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்தும் இரட்டை சதத்தை நெருங்கி வந்து அதை அடிக்காமல் வெளியேறினால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் இன்று நாம் சொல்ல தேவையில்லை, ஒரு கிரிக்கெட் வீரருக்கு டெஸ்ட் போட்டியில் ஒரு முறை இது போன்ற ஏதாவது நடந்தால் பரவாயில்லை ஆனால்  இரண்டாவது முறையாக அது நடந்தால் அந்த வீரரின் மனவலியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கையில், இன்று செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் … Read more

2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்..! 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய வீரர் ஷர்துல் தாகூர் 12 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்  இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி  நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. கடைசி நேரத்தில் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியதால்  கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட் இழந்தது. இதனால், 49 ரன்னிற்கு இந்திய அணி … Read more

“அவர் நிச்சயமாக எங்கள் திட்டங்களில் உள்ளார்”- விராட் கோலி..!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அணியில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படுவதை விராட் கோலி சுட்டிக்காட்டியுள்ளார். டி20 உலக கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.டி20 உலககோப்பையில் நியூசிலாந்து, இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.இரண்டு அணிகளையுமே பாகிஸ்தான் தோற்கடித்தது.டி20 உலக கோப்பைக் போட்டியில் அரையிறுதிக்கான இடத்தை பாகிஸ்தான் கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டது. இந்த நிலையில்,இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இன்று தோல்வியடையும் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்புள்ளதால் இன்றை … Read more

விஜய் ஹசாரே டிராபியில் 57 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த ஷார்துல் தாக்கூர்

ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாக்கூர் 57 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார், இந்த போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் என்ற இமாலய இலக்கை எடுக்க உதவினார்.ஷர்துல் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்களை அடித்தார் .இந்த போட்டியில் மும்பை 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#AUSvIND: காயம் காரணமாக பும்ரா விலகல்.. மாற்று வீரராக களமிறங்குபவர் யார்?

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 15 முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. … Read more

ஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கும் ஷர்துல் தாகூர்…!

ஜடேஜாவிற்கு பதிலாக வருகின்ற 20 ஓவர் போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நேற்று இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இறுதி ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்து ரவிந்திர ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பட்டதால் ஜடேஜா காயம் அடைந்தார். இதனால் இந்திய அணி பீல்டிங் செய்யும்போது ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மாற்று வீரராக சாஹல் களம் … Read more

INDvsWI:காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகல்.!

கடந்த புதன்கிழமை நடந்த கடைசி டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகியதை தொடர்ந்து இவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் நாளை முதல் தொடங்க உள்ளது.முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் இந்திய அணி 2-1 என்ற … Read more