இந்திய மன்னர் ஷாஜகான் பிறந்த தினம் இன்று..!

பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இந்தியாவில் ஷாஜகான் தான் ஐந்தாவது முகலாய மன்னராக ஆட்சி புரிந்துள்ளார். ஷாஜகானின் இளமை வயதில் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்துள்ளார். 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து ஷாஜகான் அரியணை ஏறியுள்ளார். முகலாய பேரரசர்களில் முக்கியமான அரசராக இவர் கருதப்படுகிறார். அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக வரலாறு குறிப்பிட்டுள்ளது. ஷாஜகான் ஆட்சி காலத்தில் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்துள்ளது. ஷாஜகான் நிறைய நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளார். … Read more